பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


[1]பகுதி IX அ
நகராட்சிகள்


243ஞ. பொருள்வரையறைகள் :

இந்தப் பகுதியில், தறுவாயின் தேவை வேறானாலன்றி,

(அ)"குழு” என்பது 243த உறுப்பின்படி அமைக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;
(ஆ) "மாவட்டம்" என்பது, ஒரு மாநிலத்திலுள்ள மாவட்டம் என்று பொருள்படும்;
(இ) "பெருநகர் வரையிடம்" என்பது, பத்து இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
மாவட்டங்களையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சிகளை (Muni.pal.cq
அல்லது ஊராட்சிகளை அல்லது அடுத்துள்ள பிற வரையிடங்களை அடக்கியதாகவும் இருந்து, இந்தப் பகுதியின் நோக்கங்களுக்காக “பெருநகர் வரையிடம்” என்று பொது அறிவிக்கை வாயிலாக ஆளுநரால் குறித்துரைக்கப்படும் ஒரு வரையிடம் என்று பொருள்படும்;
(ஈ) "நகராட்சி வரையிடம்” என்பது, ஆளுநரால் அறிவிக்கை செய்யப்பட்டவாறான ஒரு நகராட்சியின் ஆட்சி நிலவரைப் பகுதி என்று பொருள்படும்;
(உ) “நகராட்சி” என்பது, 243ட உறுப்பின்படி அமைக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் என்று பொருள்படும்;
(ஊ) “ஊராட்சி" என்பது 243ஆ உறுப்பின்படி அமைக்கப்பட்ட ஊராட்சி என்று பொருள்படும்;
(எ)“மக்கள் தொகை” என்பது, தொகை விவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசி முறை கணக்கெடுப்பின்படியாகும் மக்கள் தொகை என்று பொருள்படும்.

243ட. நகராட்சிகளை அமைத்தல் :

(1) ஒவ்வொரு மாநிலத்திலும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கிணங்க, பின்வருவன அமைக்கப்படுதல் வேண்டும்,

(அ)(எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) மாறும் இடைக்காலப் பகுதிக்கான நாகர் ஊராட்சி அதாவது ஊரகப்பகுதியிலிருந்து நகரகப் பகுதியாக மாறுகிற இடைக் காலத்திலுள்ள பகுதி;
(ஆ) சிறிய நகரகப் பகுதிக்கான நகராட்சி மன்றம்; மற்றும்
(இ) பெரிய நகரகப் பகுதிக்கான மாநகராட்சி மன்றம்:

வரம்புரையாக: ஆளுநர், நகரகப் பகுதியின் அளவையும், அந்தப் பகுதியில் ஒரு தொழில் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட அல்லது அளிக்கக் கருதப்பட்ட நகராட்சிப் பணிகளையும், தான் பொருத்தமெனக் கருதும் பிற கூறுகளையும் கருத்திற்கொண்டு, பொது அறிவிக்கை வாயிலாக, தொழில் நகரியம் என்று குறித்துரைக்கும் நகராட்சி, அந்த நகரகப் பகுதியில் அல்லது அதன் ஒரு பகுதியில் இந்தக் கூறின்படி அமைக்கப்படுதல் ஆகாது.

(2) இந்தக் கூறில், மாறும் "இடைக்காலப்பகுதி” “சிறிய நகரகப் பகுதி”, “பெரிய நகரகப் பகுதி” என்பன, ஆளுநர், அந்தப் பகுதியின் மக்கள் தொகை, அங்குள்ள மக்கள் தொகை நெருக்கம், உள்ளாட்சி நிருவாகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட வருவாய் வேளாண்மை சாராத நடவடிக்கைகளில் வேலையமர்த்த சதவீதம், பொருளாதார முக்கியத்துவம் அல்லது தான் பொருத்தமெனக் கருதும் பிற கூறுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இந்தப் பகுதியின் நோக்கங்களுக்காக பொது அறிகைகை வாயிலாகக் குறித்துரைக்கும் பகுதி என்று பொருள்படும்.


  1. 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (1-6-1993 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/130&oldid=1468950" இலிருந்து மீள்விக்கப்பட்டது