பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


(2) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் ஏதனின் திருத்தம் எதுவும், அந்தத் திருத்தத்திற்கு ஒட்டி முன்பு செயற்பட்டுவந்த நகராட்சியை (1) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட கால அளவு கழிவுறும்வரை, எந்த நிலையிலும், கலைக்கும் விளைவுடையது ஆகாது

(3) ஒரு நகராட்சியை அமைப்பதற்கான தேர்தல்—

(அ)(1) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட அதன் கால அளவு கழிவுறுவதற்கு முன்பு,
(ஆ) அது கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதகால அளவு கழிவுறுவதற்கு முன்பு

நடத்தி முடிக்கப்படுத்தல் வேண்டும்:

வரம்புரையாக: கலைக்கப்பட்ட நகராட்சி தொடர்ந்திருக்கக்கூடிய காலஅளவில் எஞ்சிய கால அளவானது ஆறு மாதத்திற்குக் குறைவாக இருக்கிறவிடத்து, அந்தக் கால அளவிற்கு நகராட்சியை அமைப்பதற்கு இந்தக் கூறின்படி தேர்தல் எதனையும் நடத்துவது தேவையானது ஆகாது.

(4) நகராட்சி ஒன்று, அதன் காலஅளவு கழிவுறுவதற்கு முன்பு கலைக்கப்படுவதன் பேரில் அமைக்கப்பட்ட நகராட்சியானது, கலைக்கப்பட்ட நகராட்சி, அவ்வாறு கலைக்கப்படாதிருந்து, (1) ஆம் கூறின்படி தொடர்ந்திருந்திருக்கக்கூடிய எஞ்சிய காலஅளவிற்கு மட்டுமே தொடர்ந்திருத்தல் வேண்டும்.

243ம. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள் :

(1) ஒருவர்-

(அ)தொடர்புடைய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் நோக்கங்களுக்காக, அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டத்தாலோ அதன் வழியாலோ அவ்வாறு உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பெறுவதற்கும், இருந்து வருவதற்கும் தகுதிக்கேற்றவராக இருப்பின், ஒரு நகராட்சி உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பெறுவதற்கும், உறுப்பினராக இருந்து வருவதற்கும் தகுதிக் கேடுற்றவர் ஆவார்:

வரம்புரையாக: ஒருவர், இருபத்தொரு வயது நிறைவெய்தியிருப்பாராயின், இருபத்து ஐந்து வயதிற்குக் குறைந்தவராக உள்ளார் என்ற காரணத்தின் பேரில் தகுதிக்கேடுற்றவர் ஆகார்.

(ஆ)மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ அவ்வாறு உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பெறுவதற்கும், இருந்து வருவதற்கும் தகுதிக்கேற்றவராகி இருப்பாராயின், ஒரு நகராட்சி உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பெறுவதற்கும் உறுப்பினராக இருந்து வருவதற்கும் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

(2) ஒரு நகராட்சியின் உறுப்பினர் ஒருவர், (1) ஆம் கூறில் சொல்லப்பட்டுள்ள தகுதிக்கேடுகளில் எதற்கேனும் உள்ளாகியிருக்கிறாரா என்பது பற்றிய பிரச்சினை எதுவும் எழுமாயின், அப்பிரச்சினை மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வாயிலாக வகை செய்யலாகும் அதிகாரஅமைப்பிற்கு அத்தகைய முறையில் அத்தகைய அதிகார அமைப்பின் முடிபுக்காகக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/133&oldid=1468994" இலிருந்து மீள்விக்கப்பட்டது