பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


243ய. நகராட்சிகளின் அதிகாரங்கள், அதிகாரஅடைவு மற்றும் பொறுப்புகள் முதலியன :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால்—

(அ) நகராட்சிகள், தன்னாட்சி நிறுவனங்களாகச் செயற்படுவதற்கு அவற்றை இயல்விக்கத் தேவையாகலாகும் அதிகாரங்களையும், அதிகாரஅடைவையும் வழங்கலாம், மேலும் அந்தச் சட்டம், அதில் குறித்துரைக்கப்படலாகும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு,

(i) பொருளாதார மேம்பாட்டிற்காகவும் சமூக நீதிக்காகவும் திட்டங்களைத் தயாரித்தல்,
(ii) பன்னிரண்டாம் இணைப்புப்பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் தொடர்பானவை உள்ளடங்கலாக, அவற்றிடம் ஒப்படைக்கப்படலாகும் செயற்பணிகளைப் புரிதல் மற்றும் திட்டங்களைச் செயற்படுத்துதல், பொறுத்து,

நகராட்சிகளிடம் அதிகாரங்களும், பொறுப்புகளும் வந்தடைவதற்கான வகையங்களை உள்ளடக்கியதாயிருக்கலாம்.

(ஆ) பன்னிரண்டாம் இணைப்புப்பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் தொடர்பானவை உள்ளடங்கலாக, அவற்றிற்கு அளிக்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அவற்றை இயல்விப்பதற்குத் தேவையாகலாகும் அதிகாரங்களையும் அதிகாரஅடைவையும் குழுக்களுக்கு வழங்கலாம்.

243ர. வரிகள் விதிப்பதற்கு நகராட்சிகளுக்குள்ள அதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள் :

ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால் குறித்துரைக்கப்படலாகும்,—

(அ) அத்தகைய நெறிமுறைக்கிணங்கவும், வரம்புகளுக்கு உட்பட்டும் வரிகள், தீர்வைகள், சுங்கவரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நகராட்சிக்கு அதிகாரமளிக்கலாம்:
(ஆ) அத்தகைய நோக்கங்களுக்காகவும், வரைக்கட்டுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டும், மாநில அரசால் விதித்து, வசூலிக்கப்படும் வரிகள், தீர்வைகள், சுங்கவரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை சட்டத்தினால் நகராட்சிக்குக் குறித்தளிக்கலாம்;
(இ)மாநிலத்தின் திறள் நிதியத்திலிருந்து நகராட்சிகளுக்கு உதவி மானியங்களை வழங்குவதற்கு வகைசெய்யலாம்; மற்றும்
(ஈ) நகராட்சிகளினால் அல்லது அதன் சார்பாக, முறையே, பெறப்பட்ட பணங்கள் அனைத்தையும் வரவு வைப்பதற்காகவும் அதிலிருந்து பணங்களைத் திரும்பப் பெறுவதற்காகவும் நிதியங்களை அமைப்பதற்கும் வகை செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/134&oldid=1468996" இலிருந்து மீள்விக்கப்பட்டது