பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


243ல. நிதி ஆணையம்:

(1) 243ஐ உறுப்பின் கீழ் அமைக்கப்பட்ட நிதி ஆணையம், நகராட்சிகளின் நிதி நிலையை மறு ஆய்வு செய்து, பின்வருவன குறித்து ஆளுநருக்குப் பரிந்துரைகள் செய்தல் வேண்டும்-

(அ)

(i) இந்தப் பகுதியின்படி மாநிலத்திற்கும் நகராட்சிகளுக்கும் இடையே பிரிக்கப்படலாகிறதும், மாநிலத்தால் விதிக்கத்தக்கதுமான வரிகள், தீர்வைகள், சுங்க வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் நிகரத் தொகைகளை அவற்றுக்கிடையே பகிர்ந்தளித்தல் மற்றும், அத்தகைய தொகைகளில், முறையே, அவற்றிற்குரிய பங்குகளை அனைத்து நிலைகளிலுமுள்ள நகராட்சிகளுக்கிடையே பகிர்ந்தொதுக்குதல்,
(ii) நகராட்சிகளுக்குக் குறித்தளிக்கப்படலாகும் அல்லது நகராட்சிகளால் பயன்படுத்தப்படலாகும் வரிகள், தீர்வைகள், சுங்க வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்,
(iii) மாநிலத் திரள் நிதியத்திலிருந்து நகராட்சிகளுக்கு உதவி மானியங்களை அளித்தல்.

ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நெறிகள்;

(ஆ) நகராட்சிகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள்,
(இ) நகரட்சிகளின் சீரான நிதி நலன் கருதி ஆளுநரால், நிதி ஆணையத்திற்கு குறித்தனுப்பப்படும் பிற பொருட்பாடு எதுவும்.

(2) ஆளுநர், இந்த உறுப்பின்படி ஆணையத்தால் செய்யப்படும் பரிந்துரை ஒவ்வொன்றையும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கக் குறிப்புரையுடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுமாறு செய்தல் வேண்டும்.

243வ. நகராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் :

ஒரு மாநிலச் சட்டமன்றம், நகராட்சிகளால் கணக்குகள் வைத்துவரப்படுதல் மற்றும் அந்தக் கணக்குகள் தணிக்கை செய்யப்படுதல் பொறுத்த வகையங்களை சட்டத்தின் வாயிலாகச் செய்யலாம்.

243வஅ. நகராட்சிகளுக்குத் தேர்தல்கள் :

(1) நகராட்சிகளுக்கான தேர்தல்கள் அனைத்திற்கும், வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான மற்றும் அத்தேர்தல்களை நடத்துவதற்கான இவற்றைக் கண்காணிப்பது நெறிப்படுத்துகை, காட்டாள்கை ஆகியவை 243ஓ உறுப்பில் சுட்டப்படும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும்.

(2) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, மாநிலச் சட்டமன்றம் சட்டத்தின் வாயிலாக, நகராட்சிகளுக்கான தேர்தல்கள் பொறுத்த அல்லது அவை தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் பொறுத்து வகை செய்யலாம்.

243வஆ. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்குப் பொருந்துதல் :

இந்தப் பகுதியின் வகையங்கள், ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்குப் பொருந்தும் மற்றும் ஓர் ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்தச் செய்கையில், ஒரு மாநில ஆளுநர் குறித்த சுட்டுகைகள், 239 ஆம் உறுப்பின்படி அமர்த்தப்பட்ட ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையர் குறித்த சுட்டுகையாக இருந்தாற்போன்றும், ஒரு மாநிலச் சட்டமன்றம் அல்லது சட்டமன்றப்பேரவை குறித்த சுட்டுகைகள், சட்டமன்றப் பேரவையைக் கொண்டிருக்கிற ஒன்றியத்து ஆட்சிநிலவரையைப் பொறுத்தவரை, அந்தச் சட்டமன்றப் பேரவை குறித்த சுட்டுகையாக இருந்தாற்போன்றும், செல்திறம் உடையதாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/135&oldid=1468997" இலிருந்து மீள்விக்கப்பட்டது