பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


(4) பெருநகர்த் திட்டக் குழு ஒவ்வொன்றின் தலைமையரும், அந்தக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு, மாநில அரசிற்குத் திட்ட மேம்பாட்டினைப் பணிந்தனுப்புதல் வேண்டும்.

243வஊ. நிலவுறும் சட்டங்களும் நகராட்சிகளும் தொடர்ந்திருத்தல் :

இந்தப் பகுதியில் எது எவ்வாறிருப்பினும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கு முரணாக, 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு ஒட்டி முன்பு, ஒரு மாநிலத்தில் செல்லாற்றலிலிருந்த நகராட்சிகள் தொடர்பான சட்டம் எதனின் வகையம் எதுவும், தகுதிறமுள்ள சட்டமன்றத்தால் அல்லது பிற அதிகாரஅமைப்பால் திருத்தம் செய்யப்படும் அல்லது நீக்கறவு செய்யப்படும்வரை அல்லது அத்தகைய தொடக்கநிலையிலிருந்து ஓராண்டு கழிவுறும்வரை இவற்றில் எது முந்தியதோ, அதுவரை செல்லாற்றலில் தொடர்ந்து இருந்துவரும்:

வரம்புரையாக: அத்தகைய தொடக்கநிலைக்கு ஒட்டி முன்பு இருந்துவரும் நகராட்சிகள் அனைத்தும், அந்த மாநிலச் சட்டமன்றத்தினால், அல்லது சட்டமன்ற மேலவையைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தைப் பொறுத்த நேர்வில், அந்த மாநிலச் சட்டமன்றத்தின் ஒவ்வொரு அவையாலும், அவற்றின் காலஅளவு கழிவுறும்வரை தொடர்ந்திருத்தல் வேண்டும் என்றபடிக்கு இயற்றப்பட்ட தீர்மானத்தினால் முன்னமே கலைக்கப்பட்டிருந்தாலன்றி, அவ்வாறு தொடர்ந்திருத்தல் வேண்டும்.

243வஎ. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்,—

(அ) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் அல்லது அத்தகைய தொகுதிகளுக்குப் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல் தொடர்பாக, 243 வஊ உறுப்பின்படி இயற்றப்பட்டுள்ள அல்லது இயற்றப்படுவதற்கு கருதப்படுகிற சட்டம் ஒன்றின் செல்லுந்தன்மை நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது.
(ஆ) நகராட்சி எதற்குமான தேர்தல் எதுவும், மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ அதன் வழியாலோ வகை செய்யப்பட்டுள்ளவாறு அத்தகைய அதிகார அமைப்பிற்கு, மற்றும் அத்தகைய முறையில் முன்னிடப்படும் ஒரு தேர்தல் மனு வாயிலாக அன்றி, எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது.]

பகுதி X
பட்டியல் வரையிடங்களும் பழங்குடியினர் வரையிடங்களும்


244. பட்டியல் வரையிடங்கள், பழங்குடியினர் வரையிடங்கள் ஆகியவற்றின் நிருவாகம் :

(1) ஐந்தாம் இணைப்புப்பட்டியலின் வகையங்கள், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் அல்லாத பிற மாநிலங்களிலுள்ள பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான நிருவாகத்திற்கும் காட்டாள்கைக்கும் பொருந்துறும்.

(2) ஆறாம் இணைப்புப்பட்டியலின் வகையங்கள், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலுள்ள பழங்குடியினர் வரையிடங்களுக்கான நிருவாகத்திற்குப் பொருந்துறும்.

244அ. அசாமிலுள்ள குறித்தசில பழங்குடியினர் வரையிடங்களை உள்ளடக்கிய தன்னாட்சிக் குறுநிலத்தை அமைத்தலும் அவ்விடங்களுக்கென உள்ளாட்சி சட்ட மன்றத்தை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதலும் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், ஆறாம் இணைப்புப்பட்டியலின் 20ஆம் பத்திக்குப் பிற்சேர்க்கையாகவுள்ள அட்டவணையின் 1ஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் வரையிடங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் (முழுமையாகவாயினும் பகுதியாகவாயினும்) உள்ளடக்கிய ஒரு தன்னாட்சிக் குறுநிலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/138&oldid=1469005" இலிருந்து மீள்விக்கப்பட்டது