பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


அசாம் மாநிலத்திற்குள்ளேயே நாடாளுமன்றம், சட்டத்தினால் அமைக்கலாம்; மேலும், அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படும் அமைப்பாக்கம், அதிகாரங்கள், பதவிப்பணிகள் ஆகியவற்றுடன்

(அ) அந்தத் தன்னாட்சிக் குறுநிலத்திற்கான ஒரு சட்டமன்றமாக இயங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அல்லது ஒரு பகுதி நியமனம் செய்யப்பட்டதாகவும் ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் உள்ள ஒரு குழுமத்தை, அல்லது
(ஆ) ஓர் அமைச்சரவையை

அல்லது அவை இரண்டையும் உருவாக்கலாம்.

(2). (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டம் எதுவும், குறிப்பாக

(அ)அசாம் மாநிலச் சட்டமன்ற அதிகாரத்தை நீக்கியோ நீக்காமலோ தன்னாட்சிக் குறுநிலச் சட்டமன்றம், அந்தக் குறுநிலம் முழுமைக்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறும் வகையில் சட்டம் இயற்றுவதற்கு உரிய பொருட்பாடுகள், மாநிலப் பட்டியலில் அல்லது ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எவை எவை என்று குறித்துரைக்கலாம்;
(ஆ) அந்தத் தன்னாட்சிக் குறுநிலத்தின் ஆட்சி அதிகாரம் அளாவி நிற்க வேண்டிய பொருட்பாடுகள் எவை எவை என்று வரையறுக்கலாம்;
(இ) அசாம் மாநிலத்தால் விதிக்கப்படும் வரி மூலமாக ஈட்டப்படும் தொகையில் அந்தத் தன்னாட்சிக் குறுநிலத்திலிருந்து கிடைத்துள்ள பங்கு எவ்வளவோ அதனை அந்தத் தன்னாட்சிக் குறுநிலத்திற்கே குறித்தளித்தல் வேண்டும் என்று வகைசெய்யலாம்;
(ஈ) இந்த அரசமைப்பின் உறுப்பு எதிலும், ஒரு மாநிலம் என்று குறிப்பிடப்படுவது அந்தத் தன்னாட்சிக் குறுநிலத்தையும் உள்ளடக்குவதாகப் பொருள்கொள்ளுதல் வேண்டும் என்று வகை செய்யலாம்; மேலும்
(உ) தேவையெனக் கருதப்படும் துணைவுறு, சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைச் செய்யலாம்.

(3). (2) ஆம் கூறின் (அ) உட்கூறில் அல்லது (ஆ) உட்கூறில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதற்கும் தொடர்புடைய திருத்தம் எதுவும் மேற்சொன்ன சட்டத்தில் செய்யப்படுமாயின், அந்தத் திருத்தம், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் வந்திருந்து வாக்களிக்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாதவர்களால் நிறைவேற்றப்பட்டாலன்றி, செல்திறம் உடையது ஆகாது.

(4) இந்த உறுப்பில் குறிப்பிடப்பட்ட சட்டம் ஒன்றில், இந்த அரசமைப்பைத் திருத்துகிற அல்லது திருத்தும் விளைவை ஏற்படுத்துகிற வகையம் எதுவும் அடங்கியிருந்தபோதிலும், அந்தச் சட்டம் 368ஆம் உறுப்பைப் பொறுத்தவரை இந்த அரசமைப்பின் திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

பகுதி XI
ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் உள்ள தொடர்புநிலைகள்
அத்தியாயம் I
சட்டமியற்றுத் தொடர்புநிலைகள்
சட்டமியற்று அதிகாரப் பகிர்வு


245. நாடாளுமன்றத்தாலும், மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் அளாவுகை :

(1) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றம், இந்திய ஆட்சி நிலவரை முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் சட்டங்கள் இயற்றலாம்; ஒரு மாநிலச் சட்டமன்றம், அந்த மாநிலம் முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் சட்டங்கள் இயற்றலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/139&oldid=1469008" இலிருந்து மீள்விக்கப்பட்டது