பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


2) மேலே கண்டவற்றிற்கும், இந்த அத்தியாத்தின் பிற வெளிப்படையான வகையம் எதற்கும் உட்பட்டு, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமோ குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையோ இந்தப் பகுதியின்படி தீர்வை அல்லது வரி எதிலிருந்தும் கிடைக்கும் தொகை ஒரு மாநிலத்திற்குக் குறித்தொதுக்கப்படும் அல்லது குறித்தொதுக்கத்தக்கதாகும் நேர்வில், எந்த முறையில் அத்தொகை கணக்கிடப்படவேண்டும் என்பதற்கும், எந்தக் காலத்திலிருந்து அல்லது எந்தக் காலத்திலும் முறையிலும் அத்தொகைகள் வழங்கப்படவேண்டும் என்பதற்கும், ஒரு நிதியாண்டிற்கும் மற்றொன்றுக்கும் இடையே கணக்கில் நேரமைவு செய்வதற்கும் பிற சார்வுருவான அல்லது துணைமையான பொருட்பாடுகளுக்கும் வகைசெய்யலாம்.

280. நிதி ஆணையம் :

(1) குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, இந்த அரசமைப்பின் தொடக்க நிலையிலிருந்து இரண்டாண்டுகளுக்குள்ளும், அதற்குப் பின்பு ஒவ்வோர் ஐந்தாவது ஆண்டு முடிவிலும் அல்லது குடியரசுத்தலைவர் தேவையெனக் கருதும் அதற்கு முந்தியதொரு காலத்திலும், நிதி ஆணையம் ஒன்றை அமைப்பார்: அவ்வாணையம் குடியரசுத்தலைவரால் அமர்த்தப்பெறும் தலைவர் ஒருவரையும் பிற நான்கு உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

(2) நாடாளுமன்றம் சட்டத்தினால், அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக அமர்த்தப்பெறுவதற்குத் தேவைப்படும் தகுதிப்பாடுகளையும் அவர்கள்தெரிந்தெடுக்கப்படவேண்டிய முறையையும் தீர்மானிக்கலாம்.

(3) பின்வருவன குறித்து குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரைகள் செய்வது இந்த ஆணையத்தின் கடமை ஆகும்:

(அ)இந்த அத்தியாயத்தின்படி ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பிரிக்கப்படவேண்டிய அல்லது பிரிக்கப்படுவதாகும் வரிகளிலிருந்து கிடைக்கும் நிகரத்தொகைகளை அவற்றுக்கிடையே பகிர்ந்தளித்தல் மற்றும், அத்தகைய தொகைகளில் முறையே அவற்றிற்குரிய பங்குகளை அந்த மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தொதுக்குதல்;
(ஆ) இந்தியத் திரள் நிதியத்திலிருந்து மாநிலங்களின் வருவாய்களுக்காக உதவி மானியங்களை அளிப்பதில் பின்பற்றப்படவேண்டிய நெறிகள்;
[1][(ஆஆ) அந்த மாநிலத்தின் நிதி ஆணையத்தால் செய்யப்படும் பரிந்துரைகளின்பேரில், மாநிலத்திலுள்ள ஊராட்சிகளின் வருவாய் அதிகாரங்களுக்குத் துணையாக அமைவதற்கு ஒரு மாநிலத்தில் திரள்நிதியத்தை அதிகரிப்பதற்குத் தேவைப்படுகிற நடவடிக்கைகள்;]
[2](இ)மாநில நிதி ஆணையத்தினால் செய்யப்பட்ட பரிந்துரைகளின்பேரில், மாநிலத்திலுள்ள நகராட்சிகளின் வருவாய் ஆதாரங்களுக்குத் துணையாக அமைவதற்கு மாநிலத் திரள் நிதியத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்;]
[3][(ஈ) சீரான நிதி நலம் கருதி குடியரசுத்தலைவர் இந்த ஆணையத்திற்குச் சுட்டியனுப்பும் பிற பொருட்பாடு எதுவும்.]

(4) அந்த ஆணையம் தனது நெறிமுறையைத் தானே தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும்; மேலும், தனது செயற்பணிகளைப் புரிந்துவருவதற்கு, நாடாளுமன்றம் சட்டத்தினால் அதற்கு வழங்கும் அதிகாரங்களையும் அது உடையது ஆகும்.

281. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் :

குடியரசுத்தலைவர், இந்த அரசமைப்பின் வகையங்களின்படி இந்நிதி ஆணையம் செய்யும் பரிந்துரை ஒவ்வொன்றையும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கக் குறிப்புரையுடன் சேர்த்து நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் அவை முன்பும் வைக்குமாறு செய்வார்.


  1. 1992ஆம் ஆண்டு அரசமைப்புச் (எழுபத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது. (24-4-1993 முதல் செல்திறம் பெறுமாறு.)
  2. 1992ஆம் ஆண்டு அரசமைப்புச் (எழுபத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது. (1-6-1993 முதல் செல்திறம் பெறுமாறு.)
  3. 1992ஆம் ஆண்டு அரசமைப்புச் (எழுபத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் மறுஎழுத்திடப்பட்டது. (1-6-1993 முதல் செல்திறம் பெறுமாறு.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/152&oldid=1468624" இலிருந்து மீள்விக்கப்பட்டது