பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


285. மாநில வரி விதிப்பிலிருந்து ஒன்றியத்து சொத்திற்கு விலக்களிப்பு :

(1) ஒன்றியத்தின் சொத்து எதுவும், நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்யும் அளவிற்கு அல்லாமல், மாநிலம் ஒன்றினால் அல்லது மாநிலம் ஒன்றிலுள்ள அதிகார அமைப்பினால் விதிக்கப்படும் வரிகள் அனைத்திலிருந்தும் விலக்களிக்கப்படுவதாகும்.

(2) நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்யும் வரையில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு ஒரு மாநிலத்தில் வரிவிதிப்புக்கு உற்றதாக இருந்த அல்லது உற்றதாகக் கருதப்பட்ட ஒன்றியத்துச் சொத்து எதன்மீதும் அந்த மாநிலத்தில் வரி எதுவும் தொடர்ந்து விதிக்கப்பட்டு வரும் வரையில், அவ்வரியை அந்த மாநிலத்திலுள்ள அதிகார அமைப்பு எதுவும் விதிப்பதற்கு, (1) ஆம் கூறிலுள்ள எதுவும் தடையூறு ஆவதில்லை.

286. சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீது வரி விதிப்பது குறித்த வரையறைகள் :

(1) மாநிலம் ஒன்றன் சட்டம் எதுவும், சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை—-

(அ) அந்த மாநிலத்திற்கு வெளியே, அல்லது
(ஆ) இந்திய ஆட்சிநிலவரைக்குள் அச்சரக்குகளை இறக்குமதி செய்கையில் அல்லது அதற்கு வெளியே அச்சரக்குகளை ஏற்றுமதி செய்கையில்
நிகழுமிடத்து, அத்தகைய விற்பனை அல்லது கொள்வினையின் மீது வரி எதனையும் விதித்தலோ விதிப்பதற்கு அதிகாரம் அளித்தலோ ஆகாது.

(2). (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் எதன்படியும் சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை எப்போது நிகழ்கிறது என்பதைத் தீர்மானிப்பதற்கான நெறிகளை நாடாளுமன்றம் சட்டத்தினால் வகுக்கலாம்.

(3) மாநிலம் ஒன்றன் சட்டம் எதுவும்—

(அ) மாநிலங்களிடை நிகழும் வணிகத்தில் அல்லது வாணிபத்தில் தனி முக்கியத்துவம் வாய்ந்தவை என நாடாளுமன்றம் சட்டத்தினால் விளம்பிய சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீதான வரி ஒன்றை, அல்லது
(ஆ) 366ஆம் உறுப்பின் (29அ) கூறின் (ஆ) உட்கூறில், (இ) உட்கூறில் அல்லது (ஈ) உட்கூறில் சுட்டப்பட்டுள்ளவை போல்வதான சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீதான வரி ஒன்றை

விதிக்கின்ற அல்லது விதிப்பதற்கு அதிகாரம் அளிக்கின்ற அளவிற்கு, அது, வரி விதிப்புமுறை, வரி வீதங்கள், பிற வரிச்சுமத்தங்கள் ஆகியவை குறித்து நாடாளுமன்றம் சட்டத்தினால் குறித்துரைக்கும் வரையறைகளுக்கும், வரைக்கட்டுகளுக்கும் உட்பட்டதாக இருக்கும்.

287. மின்விசை மீதான வரிகளிலிருந்து விலக்களிப்பு :

நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்யும் அளவிற்கு அல்லாமல், மாநிலம் ஒன்றன் சட்டம் எதுவும்-

(அ)இந்திய அரசாங்கத்தால் பயனுறுத்தப்படுகிற அல்லது இந்திய அரசாங்கத்தின் பயனுறுத்தத்திற்காக அந்த அரசாங்கத்திற்கு விற்கப்படுகிற, அல்லது
(ஆ) இருப்பூர்தியம் எதனையும் அமைப்பதில், பேணிவருவதில் அல்லது இயக்குவதில் இந்திய அரசாங்கத்தாலோ அந்த இருப்பூர்தியத்தை இயக்கிவருகிற ஓர் இருப்பூர்தி நிறுமத்தாலோ பயனுறுத்தப்படுகிற அல்லது இருப்பூர்தியம் எதனையும் அமைப்பதில் பேணிவருவதில் அல்லது இயக்குவதில் பயனுறுத்தப்படுவதற்காக

அந்த மின்விசையின் (அதை உற்பத்தி செய்தது அரசாங்கமாயினும் பிறராயினும்) பயனுறுத்தம் அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/154&oldid=1468678" இலிருந்து மீள்விக்கப்பட்டது