பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


(இ)இந்திய அரசாங்கத்தின்கீழ் அல்லது மாநில அரசாங்கம் ஒன்றின்கீழ் குடியியல் பணிபுரியும் ஒருவரைப் பாதிக்கும் ஒழுங்குக்கட்டுப்பாட்டுப் பொருட்பாடுகள் தொடர்பான பொது விண்ணப்பங்கள், மனுக்கள் உள்ளடங்கலாக, அத்தகைய பொருட்பாடுகள் அனைத்தைப் பற்றியும்,
(ஈ) இந்திய அரசாங்கத்தின்கீழ் அல்லது மாநில அரசாங்கம் ஒன்றின்கீழ் அல்லது முடியரசின்கீழ் இந்தியாவில் அல்லது இந்தியக் குறுநில அரசாங்கம் ஒன்றின்கீழ் குடியியல் பணிபுரிகின்ற அல்லது பணிபுரிந்திருக்கிற ஒருவர், தம் கடமையை நிறைவேற்றுகையில், செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயல்கள் பொறுத்து அவர்மீது தொடரப்பட்ட சட்டநடவடிக்கைகளில் எதிர்வாதம் செய்தவகையில் தாம் செய்ய நேரிட்ட செலவடை எதனையும், இந்தியத் திரள் நிதியத்திலிருந்து அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலத் திரள் நிதியத்திலிருந்து வழங்கவேண்டுமென்று அவரால் அல்லது அவரைப் பொறுத்துச் செய்யப்படும் கோரிக்கை எதனைப் பற்றியும்,
(உ) இந்திய அரசாங்கத்தின்கீழ் அல்லது மாநிலம் ஒன்றின்அரசாங்கத்தின்கீழ் அல்லது முடியரசின்கீழ் இந்தியாவில் அல்லது இந்தியக் குறுநில அரசாங்கம் ஒன்றின்கீழ் குடியியல் பணிபுரிந்தபோது தமக்கு விளைந்த கேடுகள் பொறுத்து ஓய்வூதியம் அளிப்பதற்கான கோரிக்கை எதனைப்பற்றியும்,

ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை அல்லது, நேர்வுக்கேற்ப, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்: மேலும், தங்களுக்கு அவ்வாறு குறித்தனுப்பப்பட்ட பொருட்பாடு எதன் மீதும், குடியரசுத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் ஆளுநர் தங்களுக்குக் குறித்தனுப்பும் பிற பொருட்பாடு எதன்மீதும் தேர்வுரை வழங்குவது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை ஆகும்:

வரம்புரையாக: அனைத்திந்தியப் பணியங்களைப் பொறுத்தும், ஒன்றியத்தின் அலுவற்பாடுகள் தொடர்பான பிற பணியங்கள், பணியடைகள் இவற்றைப் பொறுத்தும் குடியரசுத்தலைவரும், மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகள் தொடர்பான பிற பணியங்கள், பணியடைகள் இவற்றைப் பொறுத்து ஆளுநரும் பொதுவியலான அல்லது குறிப்பிட்ட வகையான நேர்வில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எந்தெந்தப் பொருட்பாடுகள் பற்றி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கலந்தாய்வு செய்யத் தேவையில்லை என்பதைக் குறித்துரைக்கும் ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்.

(4). 16ஆம் உறுப்பின் (4)ஆம் கூறில் வகைசெய்யப்பட்டுள்ளதை எந்த முறையில் நிறைவேற்றலாம் என்பதைப் பொறுத்தும், 335ஆம் உறுப்பின் வகையங்களுக்கு எந்த முறையில் செல்திறமளிக்கலாம் என்பதைப் பொறுத்தும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும் என (3)ஆம் கூறிலுள்ள எதுவும் வேண்டுறுத்துதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/170&oldid=1468969" இலிருந்து மீள்விக்கப்பட்டது