பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


(2). (1) ஆம் கூறில் சுட்டப்பட்டுள்ள பொருட்பாடுகள் பின்வருவனவாகும்:

(அ) வரி எதனையும் விதித்தல், கணித்தல், ஈட்டுதல் மற்றும் செயலுறுத்துதல்:
(ஆ) அயல்நாட்டுச் செலாவணி, சுங்க எல்லைகளிடையே இறக்குமதியும் ஏற்றுமதியும்; "தொழில்துறை மற்றும் தொழிலாளர் பூசல்கள்;
(ஈ) 31அ உறுப்பில் பொருள்வரையறை செய்யப்பட்ட உரிமை நிலச்சொத்து எதனையும் அல்லது அதிலுள்ள உரிமைகள் எவற்றையும், அரசு கையகப்படுத்துதல் வாயிலாகவோ அத்தகைய உரிமைகள் எவற்றையும், அழித்தல் அல்லது மாற்றமைவு செய்தல் வாயிலாகவோ, வேளாண் நிலத்திற்கு உச்சவரம்பு விதிப்பதன் வாயிலாக அல்லது பிற வழி எதனாலும் செய்யப்படும் நிலச்சீர்திருத்தங்கள்;
(உ) நகரகச் சொத்தின்மீது உச்சவரம்பு விதித்தல்;
(ஊ) 329,329அ உறுப்புகளில் சுட்டப்பட்டுள்ள பொருட்பாடுகள் நீங்கலாக நாடாளுமன்ற ஈரவைகளில் எதற்கும் அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்ற அவைக்கு அல்லது ஈரவைகளில் எதற்கும் நடத்தப்படும் தேர்தல்கள்;
(எ) (உண்தகு எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளடங்கலான) உணவுப் பண்டங்களின் மற்றும் இந்த உறுப்பினைப் பொறுத்தவரை, இன்றிமையாச் சரக்குகள் எனப் பொது அறிவிக்கை வாயிலாகக் குடியரசுத்தலைவர் விளம்பும் பிற சரக்குகளின் உற்பத்தி, கொள்முதல், வழங்கீடு, பகிர்ந்தளிப்பு மற்றும் அத்தகைய சரக்குகளின் விலைகளைக் கட்டுப்படுத்துதல்;
[1][(ஏ) குத்தகை, அதனை ஒழுங்குறுத்துதல் மற்றும் கட்டாள்கை செய்தல் மற்றும் நிலக்கிழார்களின் மற்றும் குத்தகைக்காரர்களின் உரிமை, உரிமை மூலம் மற்றும் உரித்தம் உள்ளடங்கலாக குத்தகையுரிமை எழு வினாக்கள்);
[2][(ஐ)] (அ) முதல் [3][(ஏ)] வரையுள்ள உட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த சட்டங்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றச்செயல்கள் மற்றும் அந்தப் பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த கட்டணங்கள்;
[2][(ஒ)] (அ) முதல் [4][(ஐ)] வரையுள்ள உட்கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதனையும் சார்ந்த பொருட்பாடு.


  1. 1993ஆம் ஆண்டு அரசமைப்புச் (எழுபத்தைந்தாம் திருத்தம்) சட்டத்தினால் புகுத்தப்பட்டது. 2ஆம் பிரிவினால் (15-5-1994 முதல் செல்திறம் பெறுமாறு).
  2. 2.0 2.1 (ஏ) மற்றும் (ஐ) கூறுகள் மேற்படி சட்டத்தின் பிரிவு 2 ஆல் (15-5-1994 முதல் செல்திறம் பெறுமாறு) (ஐ) மற்றும் (ஒ) என மறு எழுத்திடப்பட்டது.
  3. "(எ)" என்பதற்கு மேற்படி சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (15-5-1994 முதல் செல்திறம் பெறுமாறு) மாற்றாக அமைக்கப்பட்டது.
  4. "(ஏ)" என்பதற்கு மேற்படி சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (15-5-1994 முதல் செல்திறம் பெறுமாறு) மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/173&oldid=1468977" இலிருந்து மீள்விக்கப்பட்டது