பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148


(3) (1)ஆம் கூறின்படி இயற்றப்படும் ஒரு சட்டம்

(அ) தீர்ப்பாயங்களை படிநிலை அமைப்பில் நிறுவுவதற்காக வகை செய்யலாம்;
(ஆ) மேற்சொன்ன தீர்ப்பாயங்கள் ஒவ்வொன்றும் செலுத்துவதாகும் அதிகார வரம்பு (அவமதிப்புக்காகத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளடங்கலான) அதிகாரங்கள், அதிகாரஅடைவு ஆகியவற்றைக் குறித்துரைக்கலாம்;
(இ) மேற்சொன்ன தீர்ப்பாயங்கள் பின்பற்றவேண்டிய (காலவரம்பு, சான்று பற்றிய விதிகள் ஆகியவை குறித்த வகையங்கள் உள்ளடங்கலான) நெறிமுறைக்கு வகைசெய்யலாம்;
(ஈ) 136ஆம் உறுப்பின்படி உச்ச நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் நீங்கலாக, மேற்சொன்ன தீர்ப்பாயங்களின் அதிகாரவரம்புக்குள் வரும் பொருட்பாடுகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் பொறுத்துப் பிற நீதிமன்றங்கள் அனைத்திற்கும் உள்ள அதிகாரத்தை விலக்கிவிடலாம்;
(உ) அத்தகைய நிருவாகப் பணித் தீர்ப்பாயம் நிறுவப்படுவதை ஒட்டி முன்பு நீதிமன்றம் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதிலும் முடிவுறாநிலையிலுள்ள வழக்குகள் எவற்றையும், அவற்றில் அடங்கும் உரிமைவழக்குகளுக்கோ நடவடிக்கைகளுக்கோ ஆதாரமான வழக்குமூலங்கள், மேற்சொன்ன தீர்ப்பாயம் நிறுவப்பட்டதன் பின்பு எழுந்திருக்குமாயின், எந்தத் தீர்ப்பாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டனவாக இருந்திருக்குமோ அந்தத் தீர்ப்பாயத்திற்கு மாற்றுவதற்கு வகை செய்யலாம்;
(ஊ) அத்தகைய தீர்ப்பாயங்கள் திறம்படச் செயற்படுவதற்காகவும், அவற்றால் வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்படுவதற்காகவும், அவற்றின் ஆணைகளைச் செயலுறுத்துவதற்காகவும் தேவையென உரிய சட்டமன்றம் கருதும் (கட்டணங்கள் பற்றிய வகையங்கள் உள்ளடங்கலான) துணைவுறு, சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டிருக்கலாம்.

(4) இந்த அரசமைப்பின் பிற வகையம் எதிலும் அல்லது நிகழுறு காலத்தில் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் எது எவ்வாறிருப்பினும், இந்த உறுப்பின் வகையங்களே செல்திறன் உடையன ஆகும்.

விளக்கம்.- இந்த உறுப்பில், பொருட்பாடு எதன் தொடர்பாகவும், "உரிய சட்டமன்றம்" என்பது அத்தகைய பொருட்பாடு பொறுத்து XI ஆம் பகுதியின் வகையங்களுக்கிணங்க சட்டங்கள் இயற்றுவதற்குத் தகுதிறம் உள்ள நாடாளுமன்றம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒரு மாநிலச் சட்டமன்றம் என்று பொருள்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/174&oldid=1468978" இலிருந்து மீள்விக்கப்பட்டது