பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


329. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்

(அ) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் அல்லது அத்தகைய தொகுதிகளுக்குப் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல் தொடர்பாக, 327ஆம் உறுப்பின்படி அல்லது 328ஆம் உறுப்பின்படி இயற்றப்பட்டுள்ள அல்லது இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிற சட்டம் ஒன்றின் செல்லுந்தன்மையை எதிர்த்து நீதிமன்றம் எதிலும் வாதிடுதல் ஆகாது;
(ஆ) நாடாளுமன்ற ஈரவைகளில் எதற்கும் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற அவைக்கான அல்லது அதன் ஈரவைகளில் எதற்குமான தேர்தல் எதனையும், உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ வகைசெய்யப்பட்டுள்ளவாறான அதிகாரஅமைப்பிற்கு, அவ்வாறான முறையில் முன்னிடப்படும் ஒரு தேர்தல் மனு வாயிலாக அன்றி, எதிர்த்து வாதிடுதல் ஆகாது.

[1][329அ. ★★]

பகுதி XVI


குறித்தசில வகுப்பினர் தொடர்பான தனியுறு வகையங்கள்
330. பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மக்களவையில் பதவியிடங்களை ஒதுக்கீடுசெய்தல் :

(1) மக்களவையில் -

(அ) பட்டியலில் கண்ட சாதியினர்,
(ஆ) அசாமின் தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினர் அல்லாத பிற பட்டியலில் கண்ட பழங்குடியினர்,
(இ) அசாமின் தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினர்

ஆகியோருக்காகப் பதவியிடங்கள் ஒதுக்கீடுசெய்யப்படுதல் வேண்டும்.

(2) மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதிலும் உள்ள பட்டியலில் கண்ட சாதியினருக்கு அல்லது பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு, (1)ஆம் கூறின்படி ஒதுக்கப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் மக்களவையில் அந்த மாநிலத்திற்கு அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பகிர்ந்தொதுக்கப்படும் பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான வீதஅளவானது, கூடுமானவரையில், அவ்வாறு பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் அந்த மாநிலத்திலுள்ள அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரையிலுள்ள பட்டியலில் கண்ட சாதியினருடைய அல்லது அந்த மாநிலத்தில் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் பகுதியில் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் பகுதியில் உள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினருடைய மக்கள்தொகைக்கும் அந்த மாநிலத்தில் அல்லது ஒன்றியத்து ஆட்சி நிலவரையிலுள்ள மொத்த மக்கள்தொகைக்கும் இடையிலான அதே வீத அளவில் இருத்தல் வேண்டும்.

(3) (2)ஆம் கூறில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அசாமின் தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காக மக்களவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்திற்குப் பகிர்ந்தொதுக்கப்பட்டுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான வீதஅளவானது, அந்கத் தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தின் மொத்த மக்கள்தொகைக்கும் இடையிலான வீதஅளவிற்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.


  1. [978 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 36 ஆம் பிரிவில் நீக்கறவு செய்யப்பட்டது]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/177&oldid=1468984" இலிருந்து மீள்விக்கப்பட்டது