பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


(ஆ) பிற நேர்வு எதிலும், (மேற்சொன்ன தேதியன்று) நிலவுறும் சட்டமன்றப் பேரவையில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் எண்ணிக்கை, நிலவுறும் அச்சட்டமன்றப் பேரவையிலுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்தவீத அளவில் உள்ளதோ அந்த வீதஅளவிற்குக் குறையாத எண்ணிக்கையுள்ள பதவியிடங்கள்.

[1][(3ஆ). (3)ஆம் கூறில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் [2][2026]ஆம் ஆண்டுக்குப் பின்பு எடுக்கப்படும் முதலாம் மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் திரிபுரா மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடங்களின் எண்ணிக்கையில் செய்யப்படும் மறுநேரமைவானது, 170ஆம் உறுப்பின்படி செல்திறம் பெறும் வரையில், சட்டமன்றப் பேரவையில் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கென ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய பதவியிடங்கள், 1992ஆம் ஆண்டு அரசபைப்பு (எழுபத்திரண்டாம் திருத்தம்) சட்டம் செயலாற்றல் பெறும் தேதியன்று நிலவறும் சட்டமன்றப்பேரவையில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் எண்ணிக்கை, மேற்சொன்ன தேதியில் அந்தப் பேரவையிலுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த வீத அளவில் உள்ளதோ அந்த வீத அளவிற்குக் குறையாத எண்ணிக்கையுள்ள பதவியிடங்களாக இருத்தல்வேண்டும்.]

(4) அசாம் மாநிலச் சட்டமன்றப் பேரவையிலுள்ள மொத்தப் பதவியிடங்களின் எண்ணிக்கையில் ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கையின் வீதஅளவானது, அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் அந்த மாவட்டத்தின் மக்கள்தொகையின் வீதஅளவிற்குக் குறையாமல் இருத்தல்வேண்டும்.

(5) அசாமின் தன்னாட்சி மாவட்டம் எதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பதவியிடங்களுக்கான தேர்தல் தொகுதிகளில் அந்த மாவட்டத்திற்கு வெளியேயுள்ள பரப்பிடம் எதுவும் அடங்குவதில்லை.

(6) அசாம் மாநிலத்தின் தன்னாட்சி மாவட்டம் ஒன்றன் பட்டியலில் கண்ட பழங்குடியைச் சேர்ந்தவராக இல்லாத எவரும், அந்த மாவட்டத்தின் தேர்தல் தொகுதி எதிலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்குத் தகுமையுடையவர் ஆகார்:

[3][வரம்புரையாக: அசாம் மாநிலச் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல்களுக்காக, அவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்ட, போடோலாந்து ஆட்சிநிலவரைப் பகுதிகள் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மற்றும் போடோலாந்து ஆட்சிநிலவரைகள் பகுதிகள் மாவட்டத்தினை அமைப்பதற்கு முன்பு இருந்துவந்த தொகுதிகளில் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் அல்லாதவருக்கான சார்பாற்றம் தொடர்ந்து இருந்துவருதல் வேண்டும்.)

333. மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம் :

170ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், ஒரு மாநில ஆளுநர், அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம் தேவைப்படுகிறது என்றும் அதில் அந்தச் சமூகத்தினர் போதிய சார்பாற்றம் பெற்றிருக்கவில்லை என்றும் கருதுவாராயின், அச்சமூகத்தினரில் ஒருவரை அப்பேரவைக்கு உறுப்பினராக நியமனம் செய்யலாம்.


  1. 1992ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து இரண்டாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  2. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 7ஆம் பிரிவினால் "2000" என்பதற்கு மாற்றாக அமைக்கப்பட்டது.
  3. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூறாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/179&oldid=1468991" இலிருந்து மீள்விக்கப்பட்டது