பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158


(ஊ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான பாதுகாப்பு, நல்வாழ்வு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக, நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்.

(6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடனும், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளின்மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கையையும் அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத் தலைவர் செய்விப்பார்.

(7) அத்தகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்பாடு குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படுதல்வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநிலம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்.

(8) ஆணையமானது, (5)ஆம் கூறின் (அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது (ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதனையும் விசாரணை செய்கையில், உரிமை வழக்கு ஒன்றை விசாரணை செய்யும் ஓர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாக பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் உடையது ஆகும்:

(அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பாணை அனுப்பித் தன் முன் வரவழைத்தல் மற்றும் ஆணைமொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;
எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு
(ஆ) ஆவணம் வேண்டுறுத்தல்;
(இ) ஆணையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;
(ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன் படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலாணை இடுதல்;
ஆய்வு
(உ) சாட்சிகளை விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை செய்வதற்காகவும் பணிப்பாணைகளைப் பிறப்பித்தல்;
(ஊ) குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

(9) ஒன்றியமும், ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பட்டியலில் கண்ட பழங்குடியினரைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.]

339. பட்டியல் வரையிடங்களின் நிருவாகம், பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு ஆகியவற்றின்மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை :

(1) குடியரசுத்தலைவர், ஆணையின்வழி மாநிலங்களிலுள்ள பட்டியல் வரையிடங்களின் நிருவாகம் குறித்தும் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு பற்றியும் அறிக்கை அளிப்பதற்காக ஆணையம் ஒன்றை எச்சமயத்திலும் அமர்த்தலாம்: ஆனால், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பத்தாண்டுகள் கழிவுற்றதும் அத்தகைய ஆணையத்தை அமர்த்துதல் வேண்டும்.

அந்த ஆணையத்தின் கட்டமைப்பு, அதிகாரங்கள், நெறிமுறை ஆகியவற்றை அந்த ஆணை வரையறை செய்யலாம்; மேலும், குடியரசுத்தலைவர் தேவையென அல்லது உகந்ததெனக் கருதும் சார்வுறு மற்றும் துணைவுறு வகையங்களையும் அந்த ஆணை கொண்டிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/184&oldid=1468956" இலிருந்து மீள்விக்கப்பட்டது