பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


மேலும் வரம்புரையாக: அத்தகைய ஆறு மாதக் காலஅளவின்போது மக்களவை கலைக்கப்பட்டு அத்தகைய சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு ஆனால் அச்சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கான தீர்மானம் எதுவும் மேற்சொன்ன காலஅளவின்போது மக்களவையால் நிறைவேற்றப்படாமலிருப்பின், மக்களவை, அதன் மறு அமைப்புக்கு பின்பு முதன் முறையாக அமரும் தேதியிலிருந்து முப்பது நாள் கழிவுறுவதற்கு முன்பு, அச்சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை அத்தேதியிலிருந்து முப்பது நாள் காலஅளவு கழிவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்.

(6). (4), (5) ஆகிய கூறுகளின் நோக்கங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற ஈரவைகளில் எதனாலும், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பொரும்பான்மையும் அந்த அவையில் வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையும் பெற்றிருந்தால் மட்டுமே அத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

(7) மேலேகண்ட கூறுகளில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஒரு சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்க அல்லது, நேர்வுக்கேற்ப, அச்சாற்றாணை தொடர்ந்து செல்லாற்றலிலிருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்க மறுக்கிற தீர்மானம் ஒன்றை மக்களவை நிறைவேற்றுமாயின், குடியரசுத்தலைவர், அத்தகைய சாற்றாணையை அல்லது அத்தகைய சாற்றாணையில் மாறுதல் செய்யும் சாற்றாணையை முறித்தறவு செய்தல்வேண்டும்.

(8). (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஒரு சாற்றாணைக்கு அல்லது அத்தகைய சாற்றாணையில் மாறுதல் செய்யும் ஒரு சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்க மறுப்பதற்கு அல்லது, நேர்வுக்கேற்ப, அது தொடர்ந்து செல்லாற்றலிலிருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்க மறுப்பதற்கு ஒரு தீர்மானத்தைக் கொணர்வதற்கான தங்கள் கருத்தைத் தெரிவித்து, மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்திலொரு பகுதிக்குக் குறையாதவர்கள் கையொப்பமிட்ட எழுத்துவடிவிலான ஓர் அறிவிப்பு

(அ) அவையின் கூட்டத்தொடர் தொடர்நிலையிலிருந்தால், அவைத்தலைவருக்கு, அல்லது
(ஆ) அவையின் கூட்டத்தொடர் தொடர்நிலையில் இல்லாதிருந்தால், குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டிருக்குமிடத்து, அவைத்தலைவர் அல்லது, நேர்வுக்கேற்ப, குடியரசுத்தலைவர் அத்தகைய அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து பதினான்கு நாட்களுக்குள் அத்தகைய தீர்மானத்தை ஓர்வு செய்வதற்காக அவையின் தனி அமர்வு ஒன்று நடத்தப்படுதல் வேண்டும்.

(9) இந்த உறுப்பின்படி குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில், (1)ஆம் கூறின்படி குடியரசுத்தலைவரால் ஒரு சாற்றாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்து, அத்தகைய சாற்றாணை செயற்பாட்டில் இருப்பினும் இல்லாவிடினும் போரோ அயல்நாட்டு ஆக்கிரமிப்போ ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சியோ ஏற்பட்டுள்ளது அல்லது போரோ அயல்நாட்டு ஆக்கிரமிப்போ ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சியோ உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்து நிலை உள்ளது என்கிற வெவ்வேறு காரணங்களின்மீது வெவ்வேறான சாற்றாணைகள் பிறப்பிப்பதற்கான அதிகாரமும் அடங்கும்.

353. நெருக்கடிநிலைச் சாற்றாணையின் விளைவு :

நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால்-

(அ) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், மாநிலம் ஒன்றன் ஆட்சி அதிகாரம் எம்முறையில் செலுத்தப்படவேண்டும் என்று பணிப்புரைகள் இடுவதற்கான அதிகாரமும் ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.
(ஆ) எந்தப் பொருட்பாடு பொறுத்தும் சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமானது, ஒன்றியத்துப் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள ஒன்றாக அந்தப் பொருட்பாடு இல்லாதிருப்பினுங்கூட ஒன்றியத்திற்கு அல்லது ஒன்றியத்தின் அலுவலர்களுக்கும் அதிகாரஅமைப்புகளுக்கும் அந்தப் பொருட்பாடு பொறுத்து அதிகாரங்களை வழங்குதல், கடமைகளை விதித்தல் ஆகியவற்றிற்கான சட்டங்களை அல்லது அவ்வாறு அதிகாரங்களை வழங்கவும் கடமைகளை அதிகாரமளிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தையும் உள்ளடக்கும்: விதிக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/191&oldid=1469047" இலிருந்து மீள்விக்கப்பட்டது