பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

விளக்கம்.-இந்த உறுப்பில் "செய்தித்தாள்" என்பது, செய்தித் தாளில் வெளியிடுவதற்கான தகவல்கள் அடங்கிய செய்தி நிறுவன அறிக்கையையும் உள்ளடக்கும்.

[1][361ஆ. ஊதியம் வழங்கதக்க அரசியல் பணியடையில் அமர்த்துவதற்கான தகுதிக்கேடு:

பத்தாம் இணைப்புப்பட்டியலின் 2ஆம் பத்தியின்படி அவை ஒன்றின் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதிக்கேடுற்றவராக இருக்கிற, அரசியல்கட்சி எதனையும் சார்ந்துள்ள, அவை ஒன்றின் உறுப்பினர் ஒருவர், அவர் தகுதிக்கேடுற்ற தேதியிலிருந்து தொடங்கி அத்தகைய உறுப்பினராக அவருடைய பதவிக்காலம் கழிவுறும் தேதி வரையில் அல்லது அவை ஒன்றுக்கான தேர்தலில் அவர் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக விளம்புகை செய்யப்பட்ட தேதி வரையில், இவற்றில் எது முந்தியதோ அதுவரையில் ஊதியம் வழங்கத்தக்க அரசியல் பணியடை எதனையும் கூட வகிப்பதற்குத் தகுதிக்கேடுற்றவர் ஆவார்.

விளக்கம்.-இந்த உறுப்பின் நோக்கங்களுக்காக,

(அ) 'அவை” என்ற சொல், பத்தாம் இணைப்புப்பட்டியலின் 1ஆம் பத்தியின் (அ)கூறில் அதற்குக் குறித்தளிக்கப்பட்ட பொருளை உடையதாகும்;
(ஆ)"ஊதியம் வழங்கத்தக்க அரசியல் பணியடை" என்னும் சொற்றொடர்.

(i) இந்திய அரசின் கிழோ அல்லது ஒரு மாநில அரசின்கீழோ உள்ள பதவி எதற்கும், அத்தகைய பதவிக்கான வரையூதியமும் அல்லது பதவியூதியம், இந்திய அரசின் அல்லது நேர்வுக்கேற்ப, ஒரு மாநில அரசின் பொது வருவாயிலிருந்து, வழங்கப்படுகிறவிடத்து; அல்லது
(ii) ஒரு குழுமத்தின் கீழுள்ள பதவி எதற்கும், அந்தக் குழுமம் கூட்டுருமமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது இந்திய அரசால் அல்லது ஒரு மாநில அரசால் முழுமையாக அல்லது பகுதியாகச் சொந்தமாகக் கொண்டிருக்கப்பட்டு, அத்தகைய பதவிக்கான வரையூதியம் அல்லது பதவியூதியம், அத்தகைய குழுமத்தால் வழங்கப்படுகிறவிடத்து

வழங்கப்பட்ட வரையூதியம் அல்லது பதவியூதியம் ஈடுசெய்யும் தன்மையதாக இருக்கிறவிடத்து தவிர, அத்தகைய பதவி எதுவும் என்று பொருள்படும்.

[2][362. ★★]

363. குறித்தசில உடன்படிக்கைகள், உடன்பாடுகள், முதலியவற்றிலிருந்து எழும் பூசல்களில் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குத் தடையுறுத்தம் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், 143ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு இந்த அரசமைப்பின் தொடக்க நிலைக்கு முன்பு இந்தியக் குறுநில அரசர் ஒருவரால் செய்துகொள்ளப்பட்டு அல்லது எழுதிக்கொடுக்கப்பட்டு, இந்தியத் தன்னாட்சிய அரசாங்கம் அல்லது அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் எதுவும் ஒரு தரப்பினராயிருந்து அத்தகைய தொடக்கநிலைக்குப் பின்பும் செயற்பாட்டில் தொடர்ந்திருக்கிறதான அல்லது தொடர்ந்திருந்து வந்திருக்கிற உடன்படிக்கை, உடன்பாடு இணக்கஒப்பந்தம், உறுதிவாக்கேற்பு, சன்னது அல்லது அது போன்ற பிற முறையாவணம் ஒன்றின் வகையம் எதிலிருந்தும் எழுகிற பூசல் எதிலும், அத்தகைய உடன்படிக்கை, உடன்பாடு இணக்கஒப்பந்தம், உறுதி வாக்கேற்பு, சன்னது அல்லது அது போன்ற பிற முறையாவணம் தொடர்பாக உள்ள இந்த அரசமைப்பின் வகையங்களில் எதன்படியும் சேர்ந்தடையும் உரிமை எதனையும் அல்லது அவ்வகையங்களில் எதிலிருந்தும் எழுகிற பொறுப்படைவு அல்லது கடமைப்பாடு எதனையும் பொறுத்த பூசல் எதிலும் உச்ச நீதிமன்றம் அல்லது பிற நீதிமன்றம் எதுவும் அதிகாரம் உடையது ஆகாது.


  1. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று-ஒன்றாம் திருத்தம்) சட்டத்தினால் புகுத்தப்பட்டது.
  2. 1971ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/199&oldid=1469032" இலிருந்து மீள்விக்கப்பட்டது