பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


371இ. மணிப்பூர் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர் மணிப்பூர் மாநிலம் பொறுத்துத் தாம் பிறப்பிக்கும் ஆணையின்வழி, அந்த மாநிலத்தின் குன்றுப் பகுதிகளிலிருந்து அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் குழு ஒன்றினை அமைப்பதற்கும் 'அக்குழுவின் செயற்பணிகளுக்கும், அத்தகைய குழு முறையாகச் செயற்பணியாற்றுமாறு செய்வதற்கென அந்த மாநில அரசாங்கத்தின் அலுவல்முறை விதிகளிலும் சட்டமன்றப் பேரவையின் நெறிமுறை விதிகளிலும் செய்யப்படவேண்டிய மாற்றமைவுகளுக்கும், ஆளுநருக்கான தனிப்பொறுப்பு எதற்கும் வகைசெய்யலாம்.

(2) ஆளுநர், ஆண்டுதோறும் அல்லது குடியரசுத்தலைவர் வேண்டுறுத்துதோறும், மணிப்பூர் மாநிலத்திலுள்ள குன்றுப் பகுதிகளின் நிருவாகம் பொறுத்து குடியரசுத்தலைவருக்கு ஓர் அறிக்கையை அளிப்பார்; மேலும், ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் மேற்சொன்ன பகுதிகளில் நிருவாகம் குறித்து அந்த மாநிலத்திற்குப் பணிப்புரைகள் இடுவதும் அடங்கும்.

விளக்கம்.--இந்த உறுப்பில், “குன்றுப் பகுதிகள்” என்னும் சொற்றொடர், குடியரசுத்தலைவரால், ஆணையின்வழி, குன்றுப் பகுதிகள் என விளம்பப்படும் பகுதிகள் என்று பொருள்படும்.

371ஈ. ஆந்திரப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள் :

(1) குடியரசுத்தலைவர், ஆந்திரப் பிரதேச மாநிலம் பொறுத்துத் தாம் பிறப்பிக்கும் ஆணையின்வழி, அந்த மாநிலம் முழுவதற்குமான தேவைகளைக் கருத்திற்கொண்டு அரசு வேலையமர்த்தம் பற்றிய பொருட்பாடுகளிலும் கல்வி பற்றிய பொருட்பாடுகளிலும், அந்த மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களின் நேர்தகவான வாய்ப்புநலன்களுக்கும் வசதிகளுக்கும் வகைசெய்யலாம்; மேலும், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்காக வெவ்வேறு முறைகளில் வகை செய்யப்படலாம்.

(2) (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஓர் ஆணை, குறிப்பாக

(அ) அந்த மாநிலத்தில் ஒரு குடியியல் பணியத்திலுள்ள பணியடைகளின் வகையை அல்லது வகைகளை அல்லது அந்த மாநிலத்தின் கீழுள்ள பணியடைகளின் வகையை அல்லது வகைகளை, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கான வெவ்வேறு உள்ளமை பணிநிலைப் பிரிவுகளாக அமைக்கும்படியும், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் நெறிகளுக்கும் நெறிமுறைகளுக்கும் இணங்க அத்தகைய பணியடைகளை வகித்துவருபவர்களை, அவ்வாறு அமைக்கப்பட்ட உள்ளமை பணிநிலைப் பிரிவுகளுக்குப் பகிர்ந்தொதுக்கும்படியும் அந்த மாநில அரசாங்கத்தை வேண்டுறுத்தலாம்;
(ஆ)

(i) அந்த மாநில அரசாங்கத்தின் கீழுள்ள (இந்த உறுப்பின்படியான ஓர் ஆணையை ஒட்டி அமைக்கப்பட்ட அல்லது பிறவாறு அமைக்கப்பட்ட) உள்ளமை பணிநிலைப் பிரிவு எதிலுமுள்ள பணியடைகளுக்கு நேரடியாக ஆளெடுப்பதற்காகவும்,
(ii) அந்த மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனின் கீழுமுள்ள பணி நிலைப் பிரிவு எதற்குமான பணியடைகளுக்கு நேரடியாக ஆளெடுப்பதற்காகவும்,
(iii) அந்த மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் எதிலும் அல்லது அந்த மாநில அரசாங்கத்தின் கட்டாள்கையிலுள்ள பிற கல்வி நிறுவனம் எதிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நோக்கங்களுக்காகவும்,

உள்ளாட்சிப் பரப்பிடமாகக் கருதப்படவேண்டுமென அந்த மாநிலத்தின் பகுதி எதனையும் அல்லது பகுதிகள் எவற்றையும் குறித்துரைக்கலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/211&oldid=1470272" இலிருந்து மீள்விக்கப்பட்டது