பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186


(இ)

(i) அந்த ஆணையில் இதற்கெனக் குறித்துரைக்கப்படுகிறவாறு (ஆ) உட்கூறில் சுட்டப்பட்டுள்ள அத்தகைய பணிநிலைப் பிரிவிலுள்ள பணியடைகளுக்கு நேரடியாக ஆளெடுப்பது பற்றிய பொருட்பாட்டில்,
(ii) அந்த ஆணையில் இதற்கெனக் குறித்துரைக்கப்படுகிறவாறு (ஆ) உட்கூறில் சுட்டப்பட்டுள்ள அத்தகைய பல்கலைக்கழகத்தில் அல்லது பிற கல்வி நிறுவனத்தில் மாணவர்களைச் சேர்ப்பது பற்றிய பொருட்பாட்டில்,

நேர்வுக்கேற்ப, அத்தகைய பணிநிலைப் பிரிவினை, பல்கலைக்கழகத்தை அல்லது பிற கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, அந்த உள்ளாட்சிப் பரப்பிடத்தில், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் காலஅளவு எதன்போதும் தங்கியிருந்துள்ள அல்லது படித்துள்ள மாணவர்களுக்கு அல்லது அவர்களுக்குச் சாதகமாக எந்த அளவுக்கு, எந்த முறையில் எந்த வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு முன்னுரிமை அளிக்கப்படலாம் அல்லது ஒதுக்கீடு செய்யப்படலாம் என்பதைக் குறித்துரைக்கலாம்.

(3) குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்காக, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் 1973ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு(உச்ச நீதிமன்றம் அல்லாத பிற) நீதிமன்றம் எதனாலும் அல்லது தீர்ப்பாயம் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதனாலும் செலுத்தத்தக்கதாக இருந்த அதிகாரவரம்பு, அதிகாரம், அதிகாரஅடைவு எதுவும் உள்ளடங்கலாக அத்தகைய அதிகாரவரம்பு, அதிகாரம் அதிகாரஅடைவு ஆகியவற்றைப் பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்துச் செலுத்துவதற்கென ஒரு நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தை அமைப்பதற்காக வகைசெய்யலாம்:

(அ) அந்த ஆணையில் குறித்துரைக்கப்படுகிறவாறு அந்த மாநிலத்தின் குடியியல் பணியம் எதிலுமுள்ள பணியடைகளின் வகையை அல்லது வகைகளைப் பொறுத்து அல்லது அந்த மாநிலத்தின்கீழுள்ள குடியியல் பணியடைகளின் வகையை அல்லது வகைகளைப் பொறுத்து அல்லது அந்த மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றன் கட்டாள்கையிலுள்ள பணியடைகளின் வகையை அல்லது வகைகளைப் பொறுத்து அமர்த்துதல், பகிர்ந்தொதுக்குதல் அல்லது பதவியுயர்வு அளித்தல்;
(ஆ) அந்த ஆணையில் குறித்துரைக்கப்படுகிறவாறு அந்த மாநிலத்தின் குடியியல் பணியம் எதிலுமுள்ள பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அல்லது அந்த மாநிலத்தின்கீழுள்ள குடியியல் பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அல்லது அந்த மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒன்றன் கட்டாள்கையிலுள்ள பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அமர்த்தப்பெற்றவர்களின் பகிர்ந்தொதுக்கப்பெற்றவர்களின் அல்லது பதவியுயர்வு அளிக்கப்பெற்றவர்களின் பணிமுதுநிலை;
(இ) அந்த ஆணையில் குறித்துரைக்கப்படுகிறவாறு அந்த மாநிலத்தின் குடியியல் பணியம் எதிலுமுள்ள பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அல்லது அந்த மாநிலத்தின்கீழுள்ள குடியியல் பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அல்லது அந்த மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அதிகார அமைப்பு ஒன்றன் கட்டாள்கையிலுள்ள பணியடைகளின் வகைக்கு அல்லது வகைகளுக்கு அமர்த்தப்பெற்றவர்களின், பகிர்ந்தொதுக்கப் பெற்றவர்களின் அல்லது பதவியுயர்வு அளிக்கப்பெற்றவர்களின் பிற பணிவரைக்கட்டுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/212&oldid=1470273" இலிருந்து மீள்விக்கப்பட்டது