பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

முதலாம் இணைப்புப்பட்டியல்
(1, 4 ஆகிய உறுப்புகள்)
I . மாநிலங்கள்

பெயர்
(1)
ஆட்சிநிலவரைகள்
(2)
1. ஆந்திரப் பிரதேசம் ** 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவிலும் 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவிலும், 1959 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலிலும், 1968ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மைசூர் (ஆட்சிநிலவரை மாற்றுச்) சட்டத்தின் இணைப்புப்பட்டியலிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள், ஆனால் 1959ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை எல்லைகள் மாற்றுகை சட்டத்தின் இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் நீங்கலாக.
2. அசாம் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அசாம் மாகாணம், காஸி குறுநிலங்கள் மற்றும் அசாம் பழங்குடியினர் வரையிடங்களில் அடங்கியிருந்த ஆட்சிநிலவரைகள், ஆனால் 1951ஆம் ஆண்டு அசாம் (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் மற்றும் 1962ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப் பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் மற்றும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு வரையிடங்கள் (மறுஅமைப்பு) சட்டத்தின் 5, 6, 7 ஆகிய பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் நீங்கலாக.
3. பீகார் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு பீகார் மாகாணத்தில் அடங்கியிருந்த அல்லது அந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அவை அமைந்திருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சிநிலவரைகள் மற்றும் 1968 ஆம் ஆண்டு பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள், ஆனால், 1956ஆம் ஆண்டு பீகார் மற்றும் மேற்கு வங்காளம் (ஆட்சிநிலவரைகள் மாற்றுச்) சட்டத்தின் 3ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகளும் முதலில் சொல்லப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் [1][2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்புச் சட்டத்தின் 3ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் நீங்கலாக].
4. குஜராத் ** 1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுஅமைப்புச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.
5. கேரளம் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள

  1. 2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்புச் சட்டத்தின் (30/2000) 5ஆம் பிரிவால் சேர்க்கப்பட்டது (15-11-2000 முதல் செல்திறம் பெறுமாறு).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/223&oldid=1467256" இலிருந்து மீள்விக்கப்பட்டது