பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

பெயர்
(1)
ஆட்சிநிலவரைகள்
(2)
6. மத்தியப் பிரதேசம் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிலும் 1959 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் (ஆட்சிநிலவரைகள் மாற்றுச்) சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் [1][ஆனால், 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரேதசம் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட ஆட்சிநிலவரைகள் நீங்கலாக].
7. தமிழ்நாடு ** இந்திய அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, சென்னை மாகாணத்தில் அடங்கியிருந்த அல்லது அந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சிநிலவரைகள் மற்றும் 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 4ஆம் பிரிவிலும் 1959 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் இரண்டாம் இணைப்புப்பட்டியலிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள், ஆனால், 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவிலும் 4ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) கூறிலும் 6 ஆம் பிரிவிலும் 7 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஈ) கூறிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் 1959 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் நீங்கலாக.
8. மகாராஷ்டிரம் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள், ஆனால், 1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் நீங்கலாக.
9. கர்நாடகம் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள், ஆனால், 1968 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மைசூர் (ஆட்சிநிலவரை மாற்றுச்) சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரை நீங்கலாக.
10. ஒரிசா ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு ஒரிசா மாகாணத்தில் அடங்கியிருந்த அல்லது அந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தாற் போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சிநிலவரைகள்.
  1. 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் (28/2000) 5ஆம் பிரிவால் சேர்க்கப்பட்டது (1-11-2000 முதல் செல்திறம் பெறுமாறு).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/224&oldid=1467257" இலிருந்து மீள்விக்கப்பட்டது