பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

பெயர்
(1)
ஆட்சிநிலவரைகள்
(2)
11.பஞ்சாப் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் மற்றும் 1960 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட ஆட்சிநிலவரைகள் (ஒன்றுகை) சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலின் II ஆம் பகுதியில் சுட்டப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள், ஆனால், 1960 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலின் II ஆம் பகுதியில் சுட்டப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள், மற்றும் 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிலும் 4 ஆம் பிரிவிலும் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிலும் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் நீங்கலாக.
12. ராஜஸ்தான் ** 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்புச் சட்டத்தின் 10ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள், ஆனால், 1959ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் (ஆட்சிநிலவரைகள் மாற்றுச்) சட்டத்தின் முதலாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் நீங்கலாக.
13.உத்தரப்பிரதேசம் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, ஐக்கிய மாகாணங்கள் என வழங்கப்பட்ட மாகாணத்தில் அடங்கியிருந்த அல்லது அந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சி நிலவரைகள் மற்றும் 1968 ஆம் ஆண்டு பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் [1][மற்றும் 2000 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும்] மற்றும் 1979 ஆம் ஆண்டு அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் (ஆ) கூறில் குறித்துரைக்கப் பட்டுள்ள ஆட்சிநிலவரைகளும் நீங்கலாக.
14. மேற்கு வங்காளம் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, மேற்கு வங்காள மாகாணத்தில் அடங்கியிருந்த அல்லது அந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சிநிலவரைகள் மற்றும் 1954 ஆம் ஆண்டு சந்திர நாகூர் (ஒன்றுகை) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (இ) கூறில் வரையறை செய்யப்பட்ட சந்திர நாகூர் ஆட்சிநிலவரை, அத்துடன் 1956 ஆம் ஆண்டு பீகார் மற்றும் மேற்கு வங்காளம் (ஆட்சிநிலவரை மாற்றுச் சட்டத்தின்) 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகளுங்கூட
15. ஜம்மு-காஷ்மீர் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, இந்தியக் குறுநிலமான ஜம்மு-காஷ்மீரில் அடங்கியிருந்த ஆட்சிநிலவரை.
16. நாகாலாந்து ** 1962 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.
  1. 2000 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் (29/2000) 5ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது (9-11-2000 முதல் செல்திறம் பெறுமாறு).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/225&oldid=1467260" இலிருந்து மீள்விக்கப்பட்டது