பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பெயர்
(1)
ஆட்சிநிலவரைகள்
(2)
17. அரியானா ** 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் மற்றும் 1979 ஆம் ஆண்டு அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் (எல்லைகள் மாற்றுகை) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள் ஆனால், அந்த சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையிடங்கள் நீங்கலாக.
18. இமாச்சலப் பிரதேசம் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிலாஸ்பூர் என்னும் பெயர்களில் தலைமை ஆணையர்களின் மாகாணங்கள் போன்று நிருவாகம் செய்யப்பட்டுவந்த ஆட்சிநிலவரைகள் மற்றும் 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மறுஅமைப்புச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.
19. மணிப்பூர் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, மணிப்பூர் என்னும் பெயரில் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக இருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டுவந்த ஆட்சிநிலவரை.
20. திரிபுரா ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, திரிபுரா என்னும் பெயரில் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக இருந்தாற்போன்று நிருவாகம் செய்யப்பட்டு வந்த ஆட்சிநிலவரை.
21. மேகலாயா ** 1971 ஆம் ஆண்டு வட-கிழக்கு வரையிடங்கள் (மறுஅமைப்பு) சட்டத்தின் 5 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.
22. சிக்கிம் ** 1975 ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்தாறாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, சிக்கிமில் அடங்கியிருந்த ஆட்சி நிலவரைகள்.
23. மிசோரம் ** 1971 ஆம் ஆண்டு வட-கிழக்கு வரையிடங்கள் (மறு அமைப்பு) சட்டத்தின் 6 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள்.
24. அருணாச்சலப் பிரதேசம் ** 1971 ஆம் ஆண்டு வட-கிழக்கு வரையிடங்கள் (மறுஅமைப்பு) சட்டத்தின்

6 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.

25. கோவா ** 1987 ஆம் ஆண்டு கோவா, தமண் மற்றும் டையூ மறு அமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள்.
[1][26. சட்டீஸ்கர் ** 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.]
[2][27. உத்திராஞ்சல் ** 2000 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.]
[3][28. ஜார்கண்ட் ** 2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்புச் சட்டத்தின் 3ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.]

  1. 2000 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் (28/2000) புகுத்தப்பட்டது
  2. 2000 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மறுஅமைப்புச் சட்டத்தின் (29/2000) புகுத்தப்பட்டத
  3. 2000 ஆம் ஆண்டு பீகார் மறுஅமைப்புச் சட்டத்தின் (30/2000) புகுத்தப்பட்டது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/226&oldid=1467261" இலிருந்து மீள்விக்கப்பட்டது