பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


II. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள்

பெயர்
(1)
பரப்பிடம்
(2)
1. தில்லி ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, தில்லித் தலைமை ஆணையர் மாகாணத்தில் அடங்கியிருந்த ஆட்சிநிலவரை.
2. அந்தமான்-நிக்கோபார்த் தீவுகள் ** இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டி முன்பு, அந்தமான் நிக்கோபார்த் தீவுகள் தலைமை ஆணையர் மாகாணத்தில் அடங்கியிருந்த ஆட்சி நிலவரை.
3. இலட்சத் தீவுகள் ** 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுஅமைப்பு சட்டத்தின் 6 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள்.
4. தாத்ரா-நாகர் ஹவேலி ** 1961 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினோராம் நாளினை ஒட்டிமுன்பு, சுதந்திர தாத்ரா-நாகர் ஹவேலியில் அடங்கியிருந்த ஆட்சிநிலவரை.
5. தமண் மற்றும் டையூ ** 1987 ஆம் ஆண்டு கோவா, தமண் மற்றும் டையூ மறுஅமைப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சிநிலவரைகள்.
6. பாண்டிச்சேரிி ** 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாளினை ஒட்டிமுன்பு, பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் என வழங்கப்பட்ட இந்தியாவிலுள்ள பிரெஞ்சுக் குடியேற்ற அமைப்புகளில் அடங்கியிருந்த ஆட்சிநிலவரைகள்.
7. சண்டிகர் ** 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மறுஅமைப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/227&oldid=1467263" இலிருந்து மீள்விக்கப்பட்டது