பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203


8. ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைத்தலைவருக்கும் துணைத்தலைவருக்கும், சட்டமன்ற மேலவைத் தலைவருக்கும் துணைத்தலைவருக்கும் இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, முறையே நேரிணையான மாகாணத்தின் சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும், சட்டமன்ற மேலவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் வழங்கப்பட்டதான வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல் வேண்டும்; மேலும், அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, நேரிணையான மாகாணம், சட்டமன்ற மேலவை எதனையும் கொண்டிறாதவிடத்து, அந்த மாநிலச்சட்டமன்ற மேலவைத்தலைவருக்கும் துணைத்தலைவருக்கும் அந்த மாநில ஆளுநர் தீர்மானிக்கும் வரையூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல் வேண்டும்.

பகுதி ஈ
உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் குறித்த வகையங்கள்

9. (1) உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, உள்ளபடியே பணியில் இருந்த காலத்தைப் பொறுத்து மாதம் ஒன்றுக்குப் பின்வரும் வீதங்களில் வரையூதியம் வழங்கப்படுதல் வேண்டும்:-

தலைமை நீதிபதி - [1]10,000 ரூபாய்

பிற நீதிபதி - [2]9,000 ரூபாய்

வரம்புரையாக: உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், அவருடைய அமர்த்துகைக் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கீழோ அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் எதன்கீழுமோ ஒரு மாநில அரசாங்கத்தின்கீழோ அதற்கு முன்பிருந்த அரசாங்களில் எதன்கீழுமோ ஆற்றிய முந்தைய பணி எதனையும் பொறுத்து (ஏலாமைக்கான அல்லது உடற்காயத்திற்கான ஓய்வூதியம் அல்லாத பிற) ஓய்வூதியம் பெற்று வருவாராயின், உச்ச நீதிமன்றப் பணியைப் பொறுத்து அவரது வரையூதியம்-

(அ) அந்த ஓய்வூதியத் தொகையின் அளவுக்கும்,

(ஆ) அத்தகைய முந்தைய பணியைப் பொறுத்து அவருக்கு உரிய ஓய்வூதியத்தின் ஒரு பகுதிக்கு மாற்றாக, அதன் மாற்று மதிப்பை அத்தகைய அமர்த்துகைக்கு முன்பு அவர் பெற்றிருப்பாராயின், ஓய்வூதியத்தின் அந்தப் பகுதித் தொகையின் அளவுக்கும்,

(இ) அத்தகைய அமர்த்துகைக்கு முன்பு அத்தகைய முந்தைய பணியைப் பொறுத்து அவர் ஓய்வுப் பணிக்கொடை பெற்றிருப்பாராயின், அந்தப் பணிக்கொடையின் ஓய்வூதியத்திற்குச் சமன்மையான அளவுக்கும்

குறைக்கப்படுதல் வேண்டும்.

(2) உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரும், தம் பதவிக்குரிய உறைவிடத்தில் வாடகை ஏதுமின்றி உறைவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.

(3) இந்த அரசமைப்பின் தொடக்க நிலையை ஒட்டிமுன்பு-

(அ) கூட்டாட்சிய நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருந்து அத்தகைய தொடக்கநிலையில் 374 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆகியிருக்கிற, அல்லது

(ஆ) கூட்டாட்சிய நீதிமன்றத்தின் பிறிதோர் நீதிபதியாகப் பதவி வகித்திருந்து, அத்தகைய தொடக்கநிலையில் மேற்சொன்ன கூறின்படி உச்ச நீதிமன்றத்தின் (தலைமை நீதிபதி அல்லாத பிற) நீதிபதி ஒருவராக ஆகியிருக்கிற

ஒரு நீதிபதிக்கு, அத்தகைய தலைமை நீதிபதியாகவோ பிற நீதிபதியாகவோ அவர் பதவி வகித்திருக்கிற காலஅளவின்போது இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியில் உள்ள எதுவும் பொருந்துறுதல் ஆகாது; மேலும், அவ்வாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ பிற

  1. 18/1998 சட்டத்தின் 7 ஆம் பிரிவினால் ரூ. 33,000 ஆக உயர்த்தப்பட்டது. (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
  2. 18/1998 சட்டத்தின் 7 ஆம் பிரிவினால் ரூ. 30,000 ஆக உயர்த்தப்பட்டது. (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/229&oldid=1467267" இலிருந்து மீள்விக்கப்பட்டது