பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

நீதிபதியாகவோ ஆகிற ஒவ்வொரு நீதிபதியும், நேர்வுக்கேற்ப, அத்தகைய தலைமை நீதிபதியாகவோ பிற நீதிபதியாகவோ உள்ளபடியே பணியில் இருந்த காலத்தைப் பொறுத்து, இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்துடன், அவ்வாறு குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்திற்கும் அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அவர் பெற்றுவந்த வரையூதியத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அளவிற்குச் சமன்மையான ஒரு தொகையைச் சிறப்பு வரையூதியமாகப் பெறுவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.

(4) உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரும் இந்திய ஆட்சிநிலவரைக்குள் பணிசார்ந்த பயணத்தின்போது செய்ய நேரிட்ட செலவுகளை ஈடு செய்வதற்காக, குடியரசுத்தலைவர் அவ்வப்போது வகுத்துரைக்கும் தகுமான படித்தொகைகளைப் பெறுவார்; மேலும், பயணஞ்செய்தல் தொடர்பாக, குடியரசுத்தலைவர் அவ்வப்போது வகுத்துரைக்கும் தகுமான வசதிகளும் அவருக்குச் செய்து கொடுக்கப்படுதல் வேண்டும்.

(5) உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் (விடுப்புப் படித்தொகைகள் உள்ளடங்கலாக) வாராமை விடுப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பொறுத்த உரிமைகள், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, கூட்டாட்சிய நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்துறுவனவாக இருந்த வகையங்களுக்கு இணங்க இருந்து வரும்.

10. (1) உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு, உள்ளபடியே பணியில் இருந்த காலத்தைப் பொறுத்து, மாதம் ஒன்றுக்குப் பின்வரும் வீதங்களில் வரையூதியம் வழங்கப்படுதல் வேண்டும் :

தலைமை நீதிபதி - [1]9,000 ரூபாய்

பிற நீதிபதி - [2]8,000 ரூபாய்

வரம்புரையாக: உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அவருடைய அமர்த்துகைக் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கீழோ அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் எதன் கீழுமோ ஒரு மாநில அரசாங்கத்தின்கீழோ அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களில் எதன் கீழோ ஆற்றிய முந்தைய பணி எதனையும் பொறுத்து (ஏலாமைக்கான அல்லது உடற்காயத்திற்கான ஓய்வூதியம் அல்லாத பிற) ஓய்வூதியம் பெற்று வருவாராயின், உயர் நீதிமன்றப் பணியைப் பொறுத்து அவருடைய வரையூதியம்—


(அ) அந்த ஓய்வூதியத் தொகையின் அளவுக்கும்,

(ஆ) அத்தகைய முந்தைய பணியைப் பொறுத்து, அவருக்கு உரிய ஓய்வூதியத்தின் ஒரு பகுதிக்கு மாற்றாக, அதன் மாற்று மதிப்பை அத்தகைய அமர்த்துகைக்கு முன்பு அவர் பெற்றிருப்பாராயின், ஓய்வூதியத்தின் அந்த பகுதித் தொகையின் அளவுக்கும்,

(இ) அத்தகைய அமர்த்துகைக்கு முன்பு அத்தகைய முந்தைய பணியைப் பொறுத்து அவர் ஓய்வுப் பணிக்கொடை பெற்றிருப்பாராயின் அந்தப் பணிக்கொடையின் ஓய்வூதியத்திற்குச் சமன்மையான அளவுக்கும்


குறைக்கப்படுதல் வேண்டும்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு

(அ) மாகாணம் எதிலும் ஓர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருந்து, அத்தகைய தொடக்கநிலையில் 376 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி நேரிணையான மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆகியிருக்கிற, அல்லது

(ஆ மாகாணம் எதிலும் ஓர் உயர் நீதிமன்றத்தின் பிறிதோர் நீதிபதியாகப் பதவி வகித்திருந்து அத்தகைய தொடக்கநிலையில் மேற்சொன்ன கூறின்படி நேரிணையான மாநிலத்தில் (தலைமை நீதிபதியல்லாத பிற) நீதிபதி ஒருவராக ஆகியிருக்கிற

ஒவ்வொருவரும், அவர் அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ளதற்கும் மிகுதியான ஒரு வீதத்தில் வரையூதியம் பெற்று வந்திருப்பாராயின், அத்தகைய தலைமை நீதிபதியாகவோ பிறிதோர் நீதிபதியாகவோ உள்ளபடியே பணியில் இருந்த காலத்தைப் பொறுத்து மேற்சொன்ன உள்பத்தியில்


  1. 18/1998 சட்டத்தின் 4 ஆம் பிரிவினால் ரூ. 30,000 ஆக உயர்த்தப்பட்டது. (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
  2. 18/1998 சட்டத்தின் 4 ஆம் பிரிவினால் ரூ. 26,000 ஆக உயர்த்தப்பட்டது. (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/230&oldid=1467633" இலிருந்து மீள்விக்கப்பட்டது