பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206


மூன்றாம் இணைப்புப்பட்டியல்
(75 (4), 99,124 (6), 148 (2), 164(3), 188, 219 ஆகிய உறுப்புகள்)
ஆணைமொழிகளின் அல்லது உறுதிமொழிகளின் சொன்முறைகள்
I

ஒன்றியத்து அமைச்சருக்கான பதவி ஆணைமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் ஒன்றியத்து அமைச்சர் என்னும் முறையில் என்னுடைய கடமைகளை அகத்தூய்மையுடனும் மனச்சான்றின்படியும் ஆற்றுவேன் என்றும், அரசமைப்பு முறைக்கும் சட்ட நெறிக்கும் இணங்க அச்சம், கண்ணோட்டம் இன்றியும், விருப்பு வெறுப்பு இன்றியும், பல்திற மக்களுக்கும் தகுவன புரிவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

II

ஒன்றியத்து அமைச்சருக்கான மறைகாப்பு ஆணைமொழியின் சொன்முறை:-

“அ. ஆ. ஆகிய நான், ஒன்றியத்து அமைச்சர் என்னும் முறையில் என் ஓர்வுக்காக வைக்கப்படும் அல்லது எனக்குத் தெரியவரும் பொருட்பாடு எதனையும், அத்தகு அமைச்சர் என்னும் முறையில் என் கடமைகளை முறைப்படி ஆற்றுவதற்கு வேண்டியவாறன்றி, பிறவாறு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எந்த நபருக்கும் அல்லது நபர்களுக்கும் தெரிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரால் செய்யப்படவேண்டிய ஆணை மொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், மாநிலங்களவையில் (அல்லது மக்களவையில்) ஒரு பதவியிடத்தை நிரப்புவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பெற்றுள்ள நிலையில் சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

நாடாளுமன்ற உறுப்பினரால் செய்யப்படவேண்டிய ஆணைமொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், மாநிலங்களவையின் (அல்லது மக்களவையின்) ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள (அல்லது நியமிக்கப்பெற்றுள்ள) நிலையில், சட்ட முறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும், ஏற்கவுள்ள கடமையினை அகத்தூய்மையுடன் ஆற்றுவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/232&oldid=1467635" இலிருந்து மீள்விக்கப்பட்டது