பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208


மாநிலச் சட்டமன்ற உறுப்பினரால் செய்யப்படவேண்டிய ஆணைமொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், சட்டமன்றப் பேரவையில் (அல்லது சட்டமன்ற மேலவையில்) ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள (அல்லது நியமிக்கப்பெற்றுள்ள) நிலையில், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் ஏற்கவுள்ள கடமையினை அகத்தூய்மையுடன் ஆற்றுவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்.

VIII

உயர் நீதிமன்ற நீதிபதிகளால் செய்யப்படவேண்டிய ஆணைமொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், • • • • • • • • • • • • இல் உள்ள, அல்லது • • • • • • இன் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (அல்லது நீதிபதியாக) அமர்த்தப்பெற்றுள்ள நிலையில், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் அச்சம் கண்ணோட்டம் இன்றியும், விருப்பு வெறுப்பு இன்றியும், முறையாகவும் அகத்தூய்மையுடனும், என் முழுவினைத்திறனும் அறிவுத்திறனும் தேர்வுத்திறனும் கொண்டு என் பதவிக்குற்ற கடமைகளை ஆற்றிவருவேன் என்றும் நான் அரசமைப்பு முறையையும் சட்டநெறிகளையும் நிலைபெறச் செய்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/234&oldid=1467637" இலிருந்து மீள்விக்கப்பட்டது