பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237


20இ. பொருள்கோள் :

இதற்கெனச் செய்யப்பட்ட வகையம் எதற்கும் உட்பட்டு, இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்கள் மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்துறுகையில்—

(1) ஆளுநரையும் மாநில அரசாங்கத்தையும் பற்றிய சுட்டுகைகள், 239ஆம் உறுப்பின்படி அமர்த்தப்பெற்ற ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையரைப் பற்றிய சுட்டுகைகளாக இருந்தாற்போன்றும் ("மாநில அரசாங்கம்" என்னும் சொற்றொடரில் தவிர) மாநிலம் பற்றிய சுட்டுகைகள், மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரை பற்றிய சுட்டுகைகளாக இருந்தாற்போன்றும், மாநிலச் சட்டமன்றம் பற்றிய சுட்டுகைகள் மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றப்பேரவை பற்றிய சுட்டுகைகளாக இருந்தாற்போன்றும்,

(2)

(அ).(4) ஆம் பத்தியின் (5)ஆம் உள்பத்தியில் தொடர்புடைய மாநில அரசாங்கத்துடன் கலந்தாய்வு செய்வதற்கான வகையம் விட்டுவிடப்பட்டிருந்தாற்போன்றும்,
(ஆ).(6) ஆம் பத்தியின் (2)ஆம் உள்பத்தியில் "மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் அளாவுகின்ற” என்னும் சொற்களுக்கு மாற்றாக, "மிசோரம் ஒன்றியத்து ஆட்சி நிலவரையின் சட்டமன்றப்பேரவை சட்டங்களை இயற்ற அதிகாரம் உடைய” என்னும் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தாற்போன்றும்,
(இ)13ஆம் பத்தியில் "202ஆம் உறுப்பின்படி" என்னும் இலக்கங்களும் சொற்களும் விட்டுவிடப்பட்டிருந்தாற் போன்றும்

செல்திறம் உடையன ஆகும்.

21. இணைப்புப்பட்டியலின் திருத்தம் : (1) இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களில் எதனையும் சேர்த்தல், மாறுதல்செய்தல் அல்லது நீக்கறவு செய்தல் வாயிலாக, நாடாளுமன்றம் சட்டத்தினால் அவ்வப்போது திருத்தம் செய்யலாம்; மேலும், இந்த இணைப்புப்பட்டியல் அவ்வாறு திருத்தம் செய்யப்படுகிறபோது இந்த அரசமைப்பில் இந்த இணைப்புப்பட்டியல் பற்றிய சுட்டுகை எதுவும், அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட இணைப்புப்பட்டியல் பற்றிய சுட்டுகையாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) இந்தப் பத்தியின் (1)ஆம் உள்பத்தியில் குறிப்பிடப்பட்ட சட்டம் எதுவும், 368ஆம் உறுப்பினைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் ஒரு திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/263&oldid=1466531" இலிருந்து மீள்விக்கப்பட்டது