பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239


22. இருப்பூர்தியங்கள்.
23. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ தேசிய நெடுஞ்சாலைகள் என விளம்பப்படும் நெடுஞ்சாலைகள்.
24. எந்திரத்தால் உந்தப்படும் கலங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டத்தினால் தேசிய நீர்வழிகள் என விளம்பும் உள்நாட்டு நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்தும் கப்பல் செலுத்தமும்; அத்தகைய நீர்வழித் தட விதிகள்.
25.ஏற்றவற்றக் கடல்நீர்மீதான கப்பல் போக்குவரத்தும் கப்பல் செலுத்தமும் உள்ளடங்கலாக, கடல்வழிக் கப்பல் போக்குவரத்தும் கப்பல் செலுத்தமும்; வாணிகக் கப்பல் மாலுமிகளுக்கான கல்விக்கும் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தல்; மற்றும் மாநிலங்களும் பிற முகமைகளும் அளிக்கும் அத்தகைய கல்வியையும் பயிற்சியையும் ஒழுங்குறுத்துதல்.
26. விளக்குக்கப்பல்கள் உள்ளடங்கலாக கலங்கரைவிளக்கங்கள், வழிகாட்டும் அவிரொளிகள்; மற்றும் கப்பல் போக்குவரத்து, வானூர்திகள் ஆகியவற்றின் பாதுக்காப்பிற்கான பிறவகை ஏற்பாடுகள்.
27. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ அல்லது நிலவுறும் சட்டத்தாலோ பெருந்துறைமுகங்கள் என விளம்பப்பட்ட துறைமுகங்கள், அவற்றின் எல்லைகளை வரையறுத்தல் உள்ளடங்கலாக; அவற்றில் துறைமுக அதிகாரஅமைப்புகளை அமைத்தலும் அவற்றின் அதிகாரங்களும்.
28. துறைமுகத்தில் தொற்றுநோய்த்தடை ஒதுக்கம் அதன் தொடர்பான மருத்துவமனைகள் உள்ளடங்கலாக; கடலோடிகள் மற்றும் கடல்துறை மருத்துவமனைகள்.
29. வானூர்தியங்கள், வான்கலம் மற்றும் வான்வழிச் செலுத்தம்; வானூர்தி நிலையங்கள் அமைத்தல்; வான்வழிப் போக்குவரத்தையும், வானூர்தி நிலையங்களையும் ஒழுங்குறுத்துதலும் சீரமைத்தலும்; வானூர்திவியல் கல்விக்கும் பயிற்சிக்கும் ஏற்பாடுசெய்தல் மற்றும் மாநிலங்களும் பிற முகமைகளும் அளிக்கும் அத்தகைய கல்வியையும் பயிற்சியையும் ஒழுங்குறுத்துதல்.
30. பயணிகளையும் பண்டங்களையும் இருப்பூர்தியம், கடல், வான் வழியாகவோ அல்லது சரக்கூர்தி எந்திரத்தால் உந்தப்படும் கலங்களில் தேசிய நீர்வழிகளின் வழியாகவோ ஏற்றிச்செல்லுதல்.
31. அஞ்சல் மற்றும் தந்தி; தொலைபேசிகள், கம்பியில்லாத் தந்தி, ஒலிபரப்பு மற்றும் இவைபோன்ற பிற செய்தித் தொடர்பு இணைவங்கள்.
32. ஒன்றியத்தின் சொத்தும் அதிலிருந்து கிடைக்கும் வருவாயும்-ஆனால் ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள சொத்தினைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்திருந்தாலன்றி, அந்த மாநிலச் சட்டங்களுக்கு உட்பட்டது ஆகும்.
[1][33. ★★]
34. இந்தியக் குறுநில அரசர்களின் சொத்திற்கான காப்பாயங்கள்.
35. பொதுமக்களிடம் ஒன்றித்தின் உறுகடன்.
36. பணச் செலாவணி, நாணயமடித்தல், சட்டமுறையான செலாவணி; அயல்நாட்டுச் செலாவணி மாற்றுவீதம்.
37. அயல்நாட்டுப் பெறுகடன்கள்.
38. இந்தியச் சேம வங்கி.
39. அஞ்சலகச் சேமிப்பு வங்கி.
40. இந்திய அரசாங்கத்தினாலோ ஒரு மாநில அரசாங்கத்தினாலோ நடத்தப்படும் பரிசுச்சீட்டுகள்.
41. அயல்நாடுகளுடன் வணிகமும் வாணிபமும்; சுங்க எல்லைகளிகந்த இறக்குமதியும் ஏற்றுமதியும்; சுங்க எல்லைகளை வரையறுத்தல்.


  1. 1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 26ஆம் பிரிவினாலும் இணைப்புப்பட்டியலினாலும் விட்டுவிடப்பட்டது.]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/265&oldid=1466535" இலிருந்து மீள்விக்கப்பட்டது