பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


வரம்புரையாக:

(அ) குடியரசுத் துணைத்தலைவர், தம் கையொப்பமிட்டு குடியரசுத்தலைவருக்கு எழுத்துவழித் தெரிவித்துத் தம் பதவியைவிட்டு விலகிக்கொள்ளலாம்;
(ஆ) குடியரசுத்துணைத்தலைவர், மாநிலங்களவையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்டு. மக்களவையாலும் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்மானம் ஒன்றினால் அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்; ஆனால் இந்தக் கூறினைப் பொறுத்தவரை அத்தகைய தீர்மானம் எதுவும், அதை முன்மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்பு கொடுத்திருந்தாலன்றி, முன்மொழியப்படுதல் ஆகாது;
(இ)குடியரசுத் துணைத்தலைவர், தம் பதவிக்காலம் கழிவுற்றாலுங்கூட, அவருக்கு அடுத்துவருபவர் பதவி ஏற்கும் வரையிலும் தொடர்ந்து பதவி வகித்துவருவார்.

68. குடியரசுத் துணைத்தலைவரின் பதவி காலியிடமாகும்போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவரின் பதவிக்காலமும் :

(1) குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக் காலம் கழிவுறுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை, அந்தக் காலம் கழிவுறுவதற்கு முன்பே நடத்தி முடித்தல் வேண்டும்.

(2) குடியரசுத் துணைத்தலைவரின் இறப்பு, பதவிவிலகல் அல்லது பதவியகற்றுகை காரணத்தினாலோ பிறவாறாகவோ அவருடைய பதவி காலியிடமாகுமானால், அதை நிரப்புவதற்கான தேர்தல், அது காலியான பின்பு இயன்ற அளவு விரைவில் நடத்தப்படுதல் வேண்டும்; மேலும், அந்தக் காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவர், 67 ஆம் உறுப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, அவர் பதவி ஏற்கும் தேதியிலிருந்து முழுப் பதவிக்காலமாகிய ஐந்தாண்டுகள் பதவி வகிப்பதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

69. குடியரசுத் துணைத்தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி :

குடியரசுத் துணைத்தலைவர் ஒவ்வொருவரும், தாம் பதவி ஏற்பதற்கு முன்பு, குடியரசுத்தலைவரின் அல்லது அவரால் அதன்பொருட்டு அமர்த்தப்பெறும் ஒருவரின் முன்னிலையில் ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியைப் பின்வரும் சொன்முறையில் உள்ளபடி ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்; அதாவது—

"அ, ஆ, ஆகிய நான், சட்டமுறையில் அமைவுறு இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும், நான் ஏற்கவுள்ள கடமையினை

அகத்தூய்மையோடு ஆற்றுவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகின்றேன்"
உள்ளார்ந்து உறுதிமொழிகின்றேன்."

70. பிற எதிருறு நிகழ்வுகளில் குடியரசுத்தலைவரின் பதவிப்பணிகளை ஆற்றி வருதல் :

இந்த அத்தியாயத்தில் வகைசெய்யப்பட்டிராத எதிருறு நிகழ்வு எதிலும் குடியரசுத்தலைவரின் பதவிப்பணிகளை ஆற்றிவருவதற்கு நாடாளுமன்றம் தான் தக்கதெனக் கருதுகிற ஏற்பாட்டினைச் செய்யலாம்.

71. குடியரசுத்தலைவரை அல்லது குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய அல்லது அதன் தொடர்பான பொருட்பாடுகள் :

(1) குடியரசுத்தலைவரை அல்லது குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றியோ அதன் தொடர்பாகவோ எழும் அனைத்து ஐயப்பாடுகளையும் எதிர்வழக்குகளையும், உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும்; அதன் முடிவே அறுதியானது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/51&oldid=1469193" இலிருந்து மீள்விக்கப்பட்டது