பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


வரம்புரையாக: குடியரசுத்தலைவர், தம்மிடம் ஏற்பிசைவுக்காக ஒரு சட்டமுன்வடிவு முன்னிடப்பட்ட பின்பு, இயன்றளவு விரைவில், அது ஒரு பணச் சட்டமுன்வடிவாக இல்லாதிருப்பின், அச்சட்டமுன்வடிவையோ அதில் குறித்துரைக்கப்பட்ட வகையங்கள் எவற்றையுமோ அந்த அவைகள் மறுஆய்வு செய்யுமாறும், குறிப்பாக, தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்பத்தக்கதா என்பதைப் பற்றிக் கருதுமாறும் கேட்டுக்கொள்கின்ற செய்தியுரையுடன் அச்சட்டமுன்வடிவை அவற்றுக்குத் திருப்பியனுப்பலாம்; அவ்வாறு ஒரு சட்டமுன்வடிவு திருப்பியனுப்பப்பட்டிருக்கும்போது, அந்த அவைகள் அதன்படியே அச்சட்டமுன்வடிவை மறுஆய்வு செய்தல் வேண்டும்; மேலும், அந்த அவைகளால் அச்சட்டமுன்வடிவு திருத்தத்துடனோ திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரிடம் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், குடியரசுத்தலைவர் அதற்கு ஏற்பிசைவளிக்க மறுத்தல் ஆகாது.

நிதிபற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை


112. ஆண்டு நிதிநிலை அறிக்கை :

(1) குடியரசுத்தலைவர், ஒவ்வொரு நிதியாண்டைப் பொறுத்தும், அந்த ஆண்டிற்கான இந்திய அரசாங்க வரவு-செலவினங்கள் மதிப்பீட்டு விவரஅறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு செய்தல் வேண்டும்; அது இந்தப் பகுதியில் “ஆண்டு நிதிநிலை அறிக்கை" எனக் குறிப்பிடப்படும்.

(2) ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அடங்கியுள்ள செலவின மதிப்பீடுகளில்-

(அ)இந்த அரசமைப்பில், இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினம் என விவரிக்கப்பட்டுள்ள செலவினத்திற்குத் தேவைப்படும் பணத்தொகைகளைத் தனியாகவும்,
(ஆ) இந்தியத் திரள்நிதியத்திலிருந்து செலவுசெய்யக் கருதியுள்ள பிற செலவினத்திற்குத் தேவைப்படும் பணத்தொகைகளைத் தனியாகவும்
காட்டுதல் வேண்டும்; அத்துடன், வருவாய்க் கணக்குவகைச் செலவினத்தைப் பிறவகைச் செலவினத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும் வேண்டும்.

(3) பின்வரும் செலவினங்கள் இந்தியத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்பட்ட செலவினங்களாக இருத்தல் வேண்டும்—

(அ) குடியரசுத்தலைவரின் -பதவியூதியங்கள், படித்தொகைகள் மற்றும் அவருடைய பதவி தொடர்பான பிற செலவினங்கள்;
(ஆ) மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும்;
வட்டி, கடனடைப்பு நிதியச் செலவீடுகள், மீட்புச் செலவீடுகள் உள்ளடங்கலாக இந்திய அரசாங்கத்தின்மீது பொறுப்படைவுள்ள உறுகடன் செலவீடுகள் மற்றும் பெறுகடன் எழுப்புதல், உறுகடன் அடைத்தல், மீட்டல் ஆகியவை தொடர்பான செலவினங்கள்;
(ஈ)

(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்கள் தொடர்பாகவும் வழங்கத்தக்க வரையூதியங்கள், படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியங்கள்;
(ii) கூட்டாட்சிய நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்கள் தொடர்பாகவும் வழங்கத்தக்க ஓய்வூதியங்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/68&oldid=1469107" இலிருந்து மீள்விக்கப்பட்டது