பக்கம்:Harischandra.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) வி. ஹரிச்சந்திரன் 105 அப்பா, ஹரிச்சந்திரா மனைவி, மகன், மற்றெல்லாச் செல் வங்களையும் இழந்தபின், இந்த ஒரு சத்யத்தால் உனக்கென்ன் பலன் ? முனிசிரேஷ்டரே, தாங்கள் என்ன ஒன்றுமறியாதவர்போல் பேசுகின்றிரே? அல்லது என்னைப் பரிசோதிக்கிறீரோ? எனது சத்யம் என்னிடம் இருக்கும் வரையில் நான் ஒன்றையும் இழந்தவகைக் கருதமாட்டேன். அந்த சத்யமே நான் பெற்ற செல்வம் சத்யமே நான் ஆண்ட அரசு சத்யமே தான் அனு பவித்த சகல ஐஸ்வர்யம்! சத்யமே என்னேப் பெற்ற தாய் ! சத்யமே என்னையின்ற தந்தை சத்யமே நான் பெற்ற தன பன்! சத்யமே நான் கொண்ட தாரம் ! சத்யமே எனது சகல சற்றம்! சத்யமே எனக் கில் வுலகனைத்தும் சத்யமே என் குலம்! சத்யமே என் கோத்திரம்! சத்யமே என் குரு சத் யமே கான் வணங்கும் தெய்வம் அந்த சத்யம் என்னேவிட் டகலாதிருக்கும் வரையில் எனக்கு ஒரு குறையு மிருப்பதாக - 蠟 蛾 & 哆 , நான் நினைக்கமாட்டேன்! அந்த சத்யமானது உன்னே எக் கதிக்குக் கொண்டு வந்துவிட் டது பார் . இனியும் பிடிவாதம் செய்யாதே. இனியாவது என் வார்த்தையைக் கேள். எனது அபாரமான சக்தியை நீ அறி பாய், உன் தந்தை நன்ருயறிந்துளர்; அவர் என்னே நம்பிய படியால் அவருக்காக ஒரு உலகத்தையே சிருஷ்டித்தேன். ே யும் என் வார்த்தையை நம்பி என் சொற்படி கட, நீ இழக் ததையெல்லாம் பெறும்படி செய்கிறேன். இழந்த உனதா சின்க் கொடுக்கிறேன். இறந்த உன் மைந்தனைப் பிழைப் பூட்டுகிறேன், உன் மனேவியை இக்ககியினின்றம் காக்கின் றேன்-ஹரிச்சந்திரா, என்ன சொல்லுகிருய் ? ஸ்வாமி, நான் சொல்லக்கூடியது வேறென்ன இருக்கிறது ? அடியேன் பொருட்டு இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொள்ளச் சித்தமாயிருக்கும் தாங்கள், கொஞ்சம் தயவு செய்து நான் மேற்கொண்ட சத்ய விரதத்தைக் காத்திடும்படி அலுக்கிரஹம் செய்யவேண்டுமென்பதே, . இனியும் அந்த சத்ய விரதத்தை விடமாட்டாயா? 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/111&oldid=726772" இலிருந்து மீள்விக்கப்பட்டது