பக்கம்:Harischandra.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5; ஹரிச்சந்திான் 41 çım. அறிந்தார் யார்? ஆகவே மெல்ல நடந்து வா. இன்னும் கொஞ்சம் தாம் செல்வோமாயின் காசியை படைவோம். காட்டுத் தீயினின்றும் தப்பினுேம், கடும் பூதத்தின் கையினின் றும் பிழைத்தோம், கடுவாய் முதலிய மிருகங்களின் வாயினின் றும் உய்த்தோம். இக் கஷ்டங்களை யெல்லாம் நீக்கியருளிய ஈசன், மற்றவைகளினின்றும் நம்மைக் காத்திட மனம் வையா ரா? ஆகவே மனதை தைரியப்படுத்திக்கொள். ஓ ! ஹரிச்சந்திரா ! இந்த துராம் கடந்து வருவதற்கு இத் தனே காலமா ? நிலவில் ஒய்யாரமாய் கடப்பதுபோல் கடந்து வருகிருயே!-வா விரைந்து.-ஹரிச்சந்திரா, உடனே போய் எனக்குக் குடிக்க ஜலமும், புசிக்க ஏதாவது கனிவர்க்கமும் கொண்டுவா. பசியால் களைத்துப் போகிறேன். நா வுலர்ந்து போகிறது சீக்கிாம் சீக்கிாம் ! ஸ்வாமி, அப்படியே ஆகட்டும், கூடிய சீக்கிரத்தில் வருகி றேன். (தேவதாசனச் சந்திரமதியிடம் கொடுத்துவிட்டு விரைந்த போகிரன்.) தேவ. 莎。 (மூர்ச்சை தெளிந்து) அம்மா !-பசி -பசி ! கண்ணே, தேவதாசா, என் கண்மணியே, கொஞ்சம் பொறு, அண்ணு உணவு கொண்டுவாப் போயிருக்கிருர், சீக்கிாம் வந்து விடுவார்-கண்மணி உன் தலை விதியும் இப்படியிருந் ததா ? மன்னர் மன்னனுக்குப் புதல்வனுய்ப் பிறந்தும், மண் னினில் எல்லாச் செல்வங்களையுமிழந்து, காடு மலைகளெல் லாம் கால்நோகக்கடந்து சென்று, கடும் பசியால் களைப்புற்று, கட்டாந்தாையிற் படுத்துக் கிடக்கும்படி உன் தலையில் பிரம்ம தேவன் வரைந்தானே ? கண்ணே கண்ணே என்பொ ருட்டு நான் வருந்தவில்லை, பசி பசியென்று பரதேசியைப் போல் பரிதபிக்கும் பாலன் உன் முகத்தைப் பார்த்து நான் எப்படியடா சகிப்பேன் ? பல்கோடி பெயர்களுடைய பசியை ஆற்றும்படியான ஸ்திதியிலிருந்த காங்கள், பாலன் ஒருவன கிய உன் பசியை ஆற்றுதற்கு அசக்தர்களா யிருக்கிருேமே ! பரமேஸ்வரா பரமேஸ்வரா பாரினில் எங்களைப்போன்ற தெளர்ப்பாக்கியசாலிகளும் இருக்கிமூர்களோ ? 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/47&oldid=726814" இலிருந்து மீள்விக்கப்பட்டது