பக்கம்:Harischandra.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.41 ஹரிச்சந்திரன் 79 守。 子。 (அழுதுகொண்டு கண்ணே கண்மணி : கட்டிக்கரும்பே ! உன் மதி வதனத்தைப் பாவி நான் காண்பது இதுவோ கடைசி முறை மறு படியும் எந்த ஜன்மத்தில் இதைக் கானப்போகி றேனே ?-கண்ணே கண்ணே ! (அருகிம் சென்ற) ஸ்மசான பூமியில் இச் சமயத்தில் கண்ணிர் விட்டுக் கலங்கி அழுவது யார் : (பயந்தி) ஈசன் காத்திடுவாராக -ஐயா, ர்ே யார்? நான் இச்சுடுகாட்டைக் காத்திடும் காவளாள். ஏதோ ே இறந்த குழந்தை யொன்றை தகனம் செய்ய முயல்வதாகக் காண்கிறேன். இச் சுடுகாட்டில பிரேதத்தைக் கொளுத்து முன் செலுத்தவேண்டிய கட்டணம் எங்கே ? கட்டணமா? கட்டணமென்ருல் அதொன்றும் எனக்குத் தெரியாதே ! கட்டணம் என் முல், இச்சுடுகாட்டில் பிரேதத்தைச் சுடுமுன், இச் சுடுகாட்டிற்குச் சொந்தக்காரணுகிய என் எஜமான லுக்குச் சேரவேண்டிய வரி அதைச் செலுத்தாவிட்டால் இவ்விடத்தில் எந்தப் பிரேதத்தையும் சுடக்கூடாது. ஐயா! நீர் யாராயினுமாகுக, அநாதையான என்னிடம் அந்த வரியைச் செலுத்த அரைக் காசும் கிடையாது. என்னுடைய ஒரே பாலனைப் பறிகொடுத்த பரதேசி நான், அவனுடலைத் தகனம் செய்ய வேண்டி யிருக்கிறது. நானே ஒருவருக்கு அடுமைப் பட்டவள். அடிமையாகிய நான் எங்கிருந்து அந்தக் கட்டணத்தைச் செலுத்துவேன் ! ஐயா, என்மீது தயை புரிந்து அக் கட்டணத்தை மன்னித்து என்மைந்தனுட லைத் தகனம் செய்ய உத்தரவு கொடுமே உமக்குப் பெரும் புண்ணியமாகும் ! - அம்மா, உன் சமாசாரத்தைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் பரிதாபமாகத்தா னிருக்கிறது. ஆயினும் உனது வேண்டுகோளுக்கிசைய நான் அசக்தன யிருக்கிறேன். நான் என்து எஜமானனுடைய கட்டளைப்படி நடக்கவேண்டிய ஊழியன் அக்கட்டணத்தை மன்னிக்க எனக்கு உத்தரவு கிடையாது. ஆகவே அதைச் செலுத்தினலொழிய நீ உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/85&oldid=726856" இலிருந்து மீள்விக்கப்பட்டது