பக்கம்:Harischandra.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திான் 93 து. மஹாராஜா, இவ்விஷயத்தில் சந்தேகத்திற்கே இடமில்லை யென்று தோன்றுகிறதெனக்கு சாட்சியம் என்னவோ மிக வும் உறுதியாயிருக்கிறது. கைப்பிடியாகப் பிடிக்கப்பட்டி ருக்கிருள் இக்கொலைக்கஞ்சாப் பாதகி எனக்குத் தெரிந்த வரையில், இப்பாவி, நமது அரண்மனையில் நடுநிசியில் நுழை ந்து ராஜகுமாரனே அபகரித்துச் சென்று, ஆபரணங்களின் கிமித்தம் கொன்றிருக்க வேண்டுமென்பது தவிர வேறு முடி. விற்கு நாம் வருவதற்கு ஹேதுவில்லை, ஆகவே தாங்கள் தாமதி யாது தண்டனை விதிக்கலாம். சுமதி தவிர மற்ற மந்திரிகள். ஆம் ஆம்! அப்படியே செய்யலாம். 野町。 மந்திரி சுமதி, என்ன நீர் ஒன்றும் பேசாது ஏதோ யோசித்த வண்ணம் இருக்கிறீர்?-உம்முடைய அபிப்பிராயம் என்ன ? மஹாராஜா, என்னைத் தாங்கள் கொஞ்சம் மன்னிக்க வேண் டும். என்னுடைய மனமானது மிகவும் கலங்கி கிற்கிறது. உறுதியாய் ஒர் முடிவிற்கு வருவது கஷ்டமாயிருக்கிறது. ஒருபுறம் நோக்குமிடத்து, இந்த அம்மாள்மீது சாட்சியம் என்னவோ அதிக உறுதியா யிருப்பதுபோல் காண்கிறது. இன்னுெருபுறம் நோக்குங்கால், இவர்களுடைய தோற்றம் முதலியவற்றைக் கருதுமிடத்து, இப்படிப்பட்ட கொடிய கொலையை இவர்கள் செய்திருப்பார்களா, என்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. புத்தி நுட்பமுடைய சில கொடிய கொலைஞர், மேலுக்கு ஒரு பாபமு மறியாதவர்போல் வேஷம் தரிக்கக்கூடும் என்பதை அறிந்துள்ளேன். ஆயினும் முகத் தைக்கொண்டு அகத்தை அறிவதனல், என்னுடைய கண்கள் என்னமோசம் செய்யாவிட்டால், இப்பொழுது தமது சங்கி தானத்தில் நிற்கும் இம்மாது, ஏதோ தெளர்ப்பாக்கியத்தால் இக்கஷ்ட திசையையடைந்த உத்தம ஸ்திரீயைப்போல் காணப்படுகிருர்களே யொழிய, குழந்தையைக் கொல்லும் கொடிய பாதகியைப்போல் தோற்றப்படவில்லை. இதைவிட்டு, இக்கொலையைச் செய்தார்களா இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தில், மஹாராஜாவின் குழந்தை இவர்கள்கையில் இருக் கும்பொழுது கண்டதாக சாட்சிகள் கூறுகிருர்களே யொழிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/99&oldid=726871" இலிருந்து மீள்விக்கப்பட்டது