பக்கம்:Humorous Essays.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

7

மெயில் வண்டி, சாதாரண வண்டி முதலிய எந்த வண்டியிலும் போகலாமென்று பிரசுரம் செய்திருந்தனர்.

மற்றவர்களைப் போல நானும் வால்டேரிலிருந்து சென்னை வரையிலும் போய் வரப் பத்து ரூபாய் டிக்கட் ஒன்று வாங்கினேன். இந்த டிக்கட் இருபதாம் தேதி முதல் செலாவணியாகுமாகையால், முதல் இரண்டு தினங்களில் எல்லோரும் புறப்படுவார்கள், மூன்றாவது தினம் புறப்பட்டால் அதிக ஜன நெருக்கம் இராது என்று எண்ணி 23-ந் தேதி ரெயிலேற விசாகப்பட்டணம் ஸ்டேஷனுக்குப் போனேன். அன்று ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுவதும் ஒரே ஜனமயமாயிருந்தது. எனக்குத் தெரிந்தவர்களை விசாரித்தபோது என்னைப் போலவே அவர்களும் முதல் இரண்டு தினங்களில் புறப்பட்டால் அதிக நெருக்கமாயிருக்குமென்று இரண்டு தினங்கள் கழித்துப் புறப்பட்டதாகத் தெரிய வந்தது! ஊரிலுள்ள கோமுட்டிகளெல்லாம் ஒவ்வொருவரும் ஆழாக்குப் பால் கொண்டு வந்து ஒரு பெரிய உயர்ந்த மொடாவில் விட வேண்டுமென்று அரசனால் ஆக்கியாபிக்கப்பட்ட போது, ஒவ்வொரு கோமுட்டியும், “மற்றவர்களெல்லாம் பாலை வார்ப்பார்கள்; நாம் மாத்திரம் தண்ணீரைக் கொண்டு போய் விட்டால் யாருக்குத் தெரியப் போகிறது?” என்று யுக்தி செய்த கதை அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. நமக்குத் தோன்றுகிற. யுக்தி மற்றவர்களுக்கும் தோன்றுமேயென்று சாதாரணமாக நாம் நினைக்கிறதில்லை.

அன்று கல்கத்தா மெயில் வர வேண்டிய மணிப்பிரகாரம் ஏன் வரவில்லையென்று ஸ்டேஷன் மாஸ்டரைப் போய் விசாரித்தேன். அவர் “ஏன் ஸார்! இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்வதற்கு ஆயிரம் நாக்கு உடைய ஆதி சேஷன் போல் இருக்க வேண்டும். இந்தப் பிளாட்பாரத்திலிருக்கும் ஆண் பெண் ஒருவரில்லாமல் இக்கேள்வி கேட்டாயிற்று!” என்று கோபித்தார். அவரைச் சாந்தப்படுத்தி என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டு மெல்ல விசாரித்ததில், “கல்கத்தா மெயில் ஒரு மணி நேரம் பொறுத்துத்தான் வரும். வழியில் இம்மாதிரியான மலிவு டிக்கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/13&oldid=1352399" இலிருந்து மீள்விக்கப்பட்டது