பக்கம்:Humorous Essays.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஹாஸ்ய வியாசங்கள்

கள் வாங்குவோர் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறுவதால் மிகவும் தடைப்பட்டு விடுகிறது” என்றார்.

பதில் பேசாமல் அப்பால் சென்று பிளாட்பாரத்தில் ரெயிலேற என்னைப் போன்ற எத்தனை மேதாவிகள் இருக்கின்றனர் என்று சுமாராக எண்ணிப் பார்த்தேன். குறைந்த பட்சம் 500 ஜனங்களுக்கு மேலிருந்தனர். இவ்வளவு ஜனங்களும் அந்த மெயில் வண்டித் தொடருக்குள் எப்படி ஏறப் போகின்றனர் என்கிற கேள்வி என்னைப் பாதிக்க ஆரம்பித்தது. ஸ்டேஷன் மாஸ்டருக்குக் கிடைத்த தந்தியின்படி விஜய நகரம் வருமுன்னமே மெயில் நிறைந்திருந்ததாம். அந்த ஸ்டேஷனில் இறங்கினவர்கள் இருபது முப்பது பேர் கூட இராதாம். அந்த ஸ்டேஷனிலிருந்த ஐந்தாறு பெயர்களும் எப்படி அந்த மெயிலுக்குள் ஏறினார்கள் என்பதுதான் கேள்வி. பதில் என்னால் கூற முடியாது. அந்த இரகசியம் அந்த மெயில் வண்டித் தொடருக்குத்தான் தெரியும் போலும்! ரெயில் விசாகபட்டணம் ஸ்டேஷனுக்கு வந்த பிறகு அந்த வண்டித் தொடரிலுள்ள ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒன்றிரண்டு பேர் இறங்கினால், அவர்களுக்குப் பதிலாகப் பத்துப் பன்னிரண்டு பேர்கள் ஏறினார்கள்! இது எப்படி சாத்தியம் என்று என்னால் சொல்ல முடியாது. நான் வண்டிக்குள் எப்படி ஏறினேன் என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு ஞாபகமில்லை. கும்பலைத் தாண்டி வண்டியில் நுழைந்தேனோ, அல்லது கும்பல் என்னைத் தள்ளிக் கொண்டு போய் வண்டிக்குள் விட்டதோ என்று எனக்கே சந்தேகமாயிருக்கிறது.

புறப்பட வேண்டிய காலத்திற்கு அரை மணி கழித்து ரெயில் வண்டி புறப்பட்டது. புறப்பட்டவுடன் வெளியில் பிளாட்பாரத்தில் எத்தனை ஜனங்கள் இடம் அகப்படாமல் நின்று போய் விட்டார்களோவென்று பரிதாபப்பட்டு என் தலையை நீட்டிப் பார்த்தால், பிளாட்பாரத்தில் டிக்கெட் கலெக்டரும் போர்டர்களும் தவிர ஒருவரையும் காணவில்லை!

ரெயில் புறப்பட்டவுடன் நான் ஏறிய வண்டியில் யார் யார் இருக்கிறார்களென்று தெரிந்து கொள்வதற்காக நாலா பக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/14&oldid=1352398" இலிருந்து மீள்விக்கப்பட்டது