பக்கம்:Humorous Essays.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஹாஸ்ய வியாசங்கள்

அவர்களெல்லாம் முக க்ஷவரம் செய்து கொண்டு, பழய பாகைகளையெல்லாம் களைந்து விட்டு, சரிகை தலை குட்டைகளை முடுக்காகக் கட்டிக் கொண்டு, இளைஞர்களாக, ஆபீசுக்கு வந்து சேர்ந்தார்களாம்! -எங்கு நம்மையெல்லாம் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி அகௌண்டென்ட் ஜெனரல் சொல்லுகிறாரோ என்று பயந்து அன்று முதல் சென்னையில், பாகை கட்டி அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு ஜீவிக்கும் பலருக்கு, பாதி வேலை போயிற்று என்று கேள்விப்பட்டேன்.

எனது நண்பர் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை-அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகி, அவரது ரோமமெல்லாம்-புருவம் உட்பட-வெண்மை நிறமாக மாறி விட்டது. இது மற்றவர்களுக்குத் தெரியாதிருக்க வேண்டுமென்று தினம் எழுந்தவுடன் முகக்ஷவரம் செய்து கொண்டு, புருவம் உட்பட கேசத்திற்கெல்லாம் ஹேர்டை (Hair-dye) போட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியிற் கிளம்புவார். ஒரு நாள் அதிகாலையில் ஒரு பெரிய கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தரை ரெயில் ஸ்டேஷனில் அவர் சந்திக்க வேண்டி வந்தது. அன்று மறதியினாலோ அல்லது அதிக நேரம் தூங்கி விட்டபடியால் அவகாசமில்லாதபடியினாலோ- ‘கப்பு’ போட மறந்து போய் விட்டார். அவரை நான் ஸ்டேஷனில் சந்தித்த பொழுது, சூட்சுமமாய் “என்ன பிள்ளைவாள், உங்கள் முகம் கொஞ்சம் மாறியிருக்கிறதே”யென்று தெரிவித்தேன். உடனே அவர் ஸ்டேஷன் வெய்டிங் ரூம் (Waiting-room) கண்ணாடியருகிற் போய் தன் வெளுத்த கேசத்தையும் புருவத்தையும் பார்த்து, பயங்கொண்டவராய், தான் பார்க்க வந்த உத்யோகஸ்தரையும் பாராது, “அவர் வந்தால், இதுவரையிற் காத்துக் கொண்டிருந்தார், அவசரமான வேலையாக அவர் போய் விட்டார் என்று சொல்லி விடுங்கள்” என்று என் இடம் கூறி விட்டு, வீட்டிற்கு கம்பி காட்டினார்! -கப்பு போட்டுக் கொள்ள!

கடைசி கதை ஒன்று. ஒரு முறை நான் சிவகங்கைக்குப் போயிருந்த பொழுது அங்கு நல்ல தேகஸ்திதியிலிருந்த மிகவும் வயோதிகரான ஒரு பிராம்மணரைக் கண்டேன். அவருக்கு என் உத்தேசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/42&oldid=1352530" இலிருந்து மீள்விக்கப்பட்டது