பக்கம்:Lord Buddha.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிம். பிம். புத்த அவதாரம் .هُدفع خرى வளவு கஷ்டப்படுவானேன் அங்கோ அழிவிலாச் சுகத்தைப் பெறுவ தெங்கனம் எங்ங்ணம் ? பிம்ப சாசன் மந்திரி பரிவாரங்களுடன் வருகிருன். பெரியோரே நமஸ்காாம். அரசே வாருங்கள், உட்காருங்கள்-இங்கு என்னிடம் வந்த காரணம் யாதோ அறிய விரும்புகிறேன். பெரியோரே, தாங்கள் நேற்றைத்தினம் எனது யாக சாலைக்கு வந்து, எங்களை யெல்லாம் இதுவரையில் பீடித் திருந்த அவிவேகத்தை அகற்றி, விவேக முண்டாக்கிச் சென்ற பிறகு, இப்படிப்பட்ட மஹான் யார், அவரது விர்த்தாக்கத்தை அறியாமற் போனுேமே யென்னும் குறை, இரவெல்லாம் என்னே வாட்டியது. அக் குறை யைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டே எனது சாரணர் களை தாம் யாரென்று விசாரித்து வரும்படியாக அனுப் பினேன்; அவர்கள் தாங்க ளிங்கிருப்பதாயும், ஒன்றும் விவரமாய் அறியக்கூடவில்லை யென்றும், கிரும்பிவந்து சொல்லினர். ஆகவே நேரில் வந்து தம்மைக் கண்டு, தங்கள் வர்த்தமானம் அறிந்து போகலாமென்று வர் தேன். - அரசனே, நான் சாக்கிய குலத்தி அகித்த சுத்தோ தனராஜன் புதல்வன், சித்தார்த்தன் எனும் பெயரோன். அப்படியா (பாபாப்புடன் எழுந்து அவரது இரு காத்தையும் பற்றி) சித்தார்த்தரே ! தாங்கள் எனது பந்து வாயிற்றே எனக் கு மூத்தவராயிற்றே! தாங்கள் இங்குவக்க இப்படி இருப்பானேன் ? அப்பா பிம்பசாரா, உலகத்திலுள்ள பிராணிகளை யெல் லாம் பிறப்பு இறப்பென்னும் பந்தத்தினின்றும் விடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/81&oldid=727281" இலிருந்து மீள்விக்கப்பட்டது