பக்கம்:Lord Buddha.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 புத்த அவதாரம் 79 வித்து, துக்கமெனும் சாகரத்தினின்றும் கரையேற்றி, கிரந்தரமான ஆநந்தத்தை படையச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவனுய், அம் மார்க்கத்தைக் கண்டு பிடிக்கவேண்டி, இவ்வாறு துறவு பூண்டு நிற்கிறேன். பிம். அந்தோ சித்தார்த்தரே ! உமது தேகம் ராஜயோகத்தை அனுபவிக்கப் பிறந்ததே யொழிய இவ்வாறு தவத்தினல் க்ரிசமாக்கப்படப் பிறப்பிக்க படவில்லையே! உமது தரங் கள் செங்கோலைப் பிடிப்பதை விட்டு, பிட்சா பாத்திரத் தை எடுக்கவோ அறுசுவையுடன் அமர்ந்து அரண் மனையில் வாழ்வதைவிட்டு, அயலிடு பிச்சை யுண்டு, அநாதையைப்போல் அரண்யத்தில் தாம் சஞ்சரிக்க லாமா ? ஆகவே, சித்தார்த்தாே, தவம் செய்வதை பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் விட்டு, என தாண்மனைக்கு வாரும்-எனது ராஜ்யத்தில் பாதி உமக் குத் தருகிறேன், என்னுடன் சிம்மாசனத்தில் வீற்றிருந் து இவ்வுலகை யாளும். எனக்குப் பிள்ளை பில்லை, ஒரே குமாாத்தியிருக்கிருள், அவளை மணந்து, எனதாண் மனேயில் சுகமாய் வாழும்; எனக்குப் பிற்காலம் இம் முழு வாசும் உம்முடைய தாகும்.--இதோ என் முடி யைப் பெற்றுக்கொள்ளும் (தனது கிரீடத்தைக் கொடுக்கப் பார்க்கிருர்) சி. (அதைத் தடுத்து) அப்பா, பிம்பசாரா, அரசச் செல்வமும் அரசும், அரண்மனைச் சுகங்களும், அணங்கியலான தார மும் எனக் கிருந்தன வன்ருே ? அவைகளை யெல்லாம் மனமொப்பி விட்டே, கான் விருப்பும் உண்மையை நாடி இத் துறவு பூண்டேன். வெறுத்து வாங்கி செய் ததை உவந்து மறுபடியும் ஒருவன் உட்கொள்ளு வானே தானிருந்த வீட்டில் தீப்பற்றி எறிகிற தெனக் கண்டு அதை விட்டு ஒடினவன், மறுபடியும் அதனுள் துழைய விரும்புவானே? இவைகளெல்லாம் கிலையிலாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/83&oldid=727283" இலிருந்து மீள்விக்கப்பட்டது