பக்கம்:Mixture.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 7 அக்கோபுரத்தின் சிகாத்தைப் பார்க்க, அச்சிக்ாத்தின் உச்சியில், கட்டப்பட்டு என் குதிரை தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்! எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை;நேற்றிராத்திரி எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாயிருந்த ஒர் இடத்தில் கமது குதிாை யை, ஒரு முளையில் கட்டிவிட்டு, ஒரு புறமாகப் படுத்துக் இெரண்டோமே, இன்று காலே நாம் இந்த ஊருக்கு எப்படி வந் தோம் ? நமது குதிரை இம்மாதாக் கோயிலின் சிகரத்தில் எப்படி கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது? என்று என் நுண்ணிய அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தேன். உடனே உண்மை வெளியாயது எனக்கு! நானிருந்த ஊர் ருஷியா தேசத்தில் ஒர் ஊர் என்பது எனக்கு ஞாபகம் வந்தது. முந்தியநாள் இரவு நான் அந்த ஊருக்கு வந்த பொழுது, பனிபெய்து ஸ்னே (Snow) என்னும் பனிக்கட்டிகள் கிறைந்து பட்டனமெங்கும் அம்மாதிரிக் கட்டிகளால் மூடப்பட்டிருந்தது; இம்மாதாக் கோயிலின் கோபுர சிகரம் மாத்திரம் அதிக உயரமாயிருந்தபடியால், அப்பனிக் கட்டி யின் மீது ஒரு முளையைப் போல சோன்றி யிருக்க வேண்டும். இவ் வுண்மையை யறியாது ஏதோ தெய்வாதினமாய் சமது குதிரையைக் கட்ட ஒரு ஆப்பு கிடைத்ததே என்று நான் என் குதிரையை அதில் கட்டிவிட்டு பக்கத்தில் படுத்துறங்கியிருக்க வேண்டும்; காலை யில் சூரியன் உதயமாக அப்பனிக் கட்டிகளெல்லாம் சூரிய வெப்புத் தினுல் உருகிப் போகவே, நான் மெல்ல நகிழ்ந்து கீழே தெருவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்; என் குதிரையோ அம்மாதாக் கோயிலில் சிகரத்தில் கட்டப் பட்டதினுல், அங்கே கொக்கிக் கொண்டிருக்க வேண்டும்; என்னும் உண்மை வெளியாயது. நான் முன்னல் Gಖ೬೫೬-LJ H. !! இளைப்பினல் வக்க நல்லதுரக்கத்தில் பனிக்கட்டிகள் உருகி நான் மெல்ல கிழே தெருவில் விழுந்ததை அறியாமம் போனேன். உடனே என்.குதிரையின் மீது பரிதாபப் பட்டு, என் கைக் துப்பாக்கியை எடுத்த கீழிருந்தபடி க் - அது கட்டியிருந்த கயிற்றண்டை சரியாகத்தாக்கி, அக்கயிற்றை அறுத் தது. குதிரையும் கீழே விழுந்தது. உடனே அதன் பேரில் ஏறிக் கொண்டு ருஷியா தேசத்து அரசர் தங்கியிருந்த ஊர் போய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/12&oldid=727304" இலிருந்து மீள்விக்கப்பட்டது