பக்கம்:Mixture.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 19 இதன் பலகை அக்குதிரையின் கடிவாளம் முதலிய ஆர்னெஸ் (harness) கோனுயின் உடலில் மாட்டிக் கொண்டது. இதுதான் சமயம் என்று, கான் 5@తా உட்கார்ந்து என் ஜாட்டியிஞல் கோனயை, குதிரையை யடிப்பது போல் அடித்தேன். உடனே கோளும் ஏதோ பிசாசு கம்மை அடிக்கிறது என்று பயந்ததாய் காற்ற வேகமாய்ப் பக்க ஆரம்பித்தது. இப்படியே கொடுங் கோளுப் பூட்டிய என்ஸ்லெட்ஜ் வண்டியை ஒட்டிக் கொண்டு மாஸ் கோ நகரத்தின் அரசர் அரண்மனையைப் போய்ச் சேர்ந்தேன். மற்ற கனவான்களெல்லாம் குதிரைகள் பூட்டிய வண்டியில் அங்கு விஜயம் செய்ய, தான் கோனுய் பூட்டிய வண்டியில் வந்து சேர்ந்ததைக்கண்டு, அரசர் உட்பட அங்கிருந்தவர்களெல்லாம், மிகவும் ஆச்சரியப் பட்டனர். நான் அரண்மனேயின் முற்றம் போய்ச் சேர்ந்ததும், என் வண்டியை இழுத்துக் கொண்டு வந்த அக்கொடிய கோனுய், குதிசையைத் கின்றதினலோ, அல்லது அத்தனே மயில் என் ஸ் லெட்ஜ் வண்டியை இழுத்து வந்ததிகுலோ, அல்லது என் சவுக்கடி பொறுக்க முடியாததினலோ, கீழே விழுந்து இறந்தது. உடனே எல்லோரும் இந்த ஆச்சரியகரமான கோளுயைப் பார்க்க அருகில் கெருங்கினர்கள். அப்பொழுது அாசாது தளகர்த்தர் ஒருவர் 'ஓ ! இதுதான் அக்காட்டில் பிரயாணிகளை யெல்லாம். இன்னம் படுத்திக் கொண்டிருந்த கொடுங் கோளுய்!” என்று தெரிவித்தார். அன்றியும் அதைக் கொல்பவர்களுக்கு அளிப்பதாக பறையறை வித்திருந்த பரிசை எனக்குக் கொடுக்க வேண்டுமென்று அரச ருக்கு தெரிவித்தார். அரசரும் அத்தொகையை எனக்குப் பரிசாக அளிக்க வா, நான் வேண்டாமென்று தடுத்து, அதை ராஜ குமாரிக்கு கலியாணப் பரிசாகக் கொடுக்கும்படி வேண்டினேன். அதன் மீது அாசர் அகமகிழ்த்து 'ஒனயை ஒட்டிய ஒப்பில்லா வீரன்’ என்னும் அர்த்தமுடைய ருஷ்யா பாஷையில் எனக்கு ஒரு பட்டப் பெயர் அளித்தார். இக்கதையை பற்றி யாராவது சந்தேகப் படுவதானல், உடனே ருஷ்யா தேசத்து அரசரிடம் போய் கேட்டுக் கொள்ளலாம், அவ்வரசர் இது பொய் என்று தெரிவித்தால் இனி மேல் கான் ஒரு கதையையும் சொல்வதில்லை என்று பிரமாணம் செய்கிறேன். (குறிப்பு: ருஷ்யா தேசத்து அரசர் இறந்து இருபது வருஷங்களுக்கு மேலாகிறது. இப்பொழுது அவரது மேல் விலாசம் எனக்குச் சரி யாக தெரியாது).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/26&oldid=727318" இலிருந்து மீள்விக்கப்பட்டது