பக்கம்:Mixture.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் யிருக்கவேண்டும், என்றே சொல்லவேண்டும். முக்கியமாக அவை களேயெல்லாம் அறிக்கிருப்பது மன்றி அவைகளை மற்றவர்களுக்குக் தக்கபடி போதிக்கும் சக்தி வாய்ந்தவனுயிருக்க வேண்டும். அநேகம் பெயர் நாடகக் கலையைப் பற்றி பலவிஷயங்களை அறிந்தவர்களா யிருப்பதைப் பார்த்திருக்கிறேன் ; ஆயினும் அவர்களுள் பெரும் பாலர் மற்றவர்களுக்கு அவற்றைக் கற்பிக்கும் திறமில்லாதவர்களா யிருக்கின்றனர்; இது பிரயோஜனப்படாது. தான் கற்றதைப் பிறருக்குப் போதிக்கும்படி யான சக்கியில்லாத உபாத்தியாயன் என்ன பிரயோஜனம்? ஒரு கண்டக்டர் ஒவ்வொரு ஆக்டருக்கும் இன்னின்ன வசனங்களை இன்னின்ன முகபாவத்துட லும் அங்க அபிநயத்துடனும் சொல்லவேண்டும், என்று வாயாற் சொல்லிக் கொடுக்கும்படியான திறமையைவிட, அவ்வண்ணம் நடித்துக் காட்டுவது பதின்மடங்கு மேலல்லவா சில கண்டக்டர் கள் நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டு இந்த வசனத்தை இன்னும் உருக்கமாய் ஆக்டு செய்யவேண்டும், இன்னும் கோபத்து டன் ஆக்டு செய்யவேண்டும்,” என்று இப்படிப்பட்ட உத்திாவுகளே ஆக்டர்களுக்குச் சொல்லும் போது, அக்க ஆக்டர்கள் நீங்கள் சொல்லுவது எங்களுக்கு நன்முய்ப் புலப்படவில்லை, நீங்கள் சொல்லு கிறபடி ஆக்டு செய்து காட்டுங்கள்” என்று பதில் உரைக்க, அங்ங்னம் செய்ய முடியாதவர்களாய், விழித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மாணவர்கள் தாங்கள் கெளரவிக்கத் தக்க உபாத்தியாயர்களிட மிருந்துதான் பாடம் சரியாகக் கிாஹிப்பது போல, ஆக்டர்களும் தாங்கள் கெளரவிக்கத் தக்க கண்டக்டர்களிடமிருந்துதான் தக்க படி ஆக்டுசெய்ய கற்றுக் கொள்ளக்கூடும். இப்பெருமையை வஹிக்கத்தகாதவர்கள் கண்டக்டர்களாக இருக்க முயல்வது தவறு. கண்டக்டர்கள் முக்கியமாக மிகவும் பொறுமை யுடைவர்களா யிருத்தல் வேண்டும். சில ஆக்டர்களுக்கு யாதேனுமொரு விஷயம் ஒரு முறைக்குப் பன்முறை சொல்லிக் கொடுத்தாலொழிய வராது; 'கான் இரண்டு மூன்று முறை சொல்லி கொடுத்தும் உனக்கு விர வில்லையே!” என்று கோபித்துக் கொள்வதில் பிரயேஜனமில்லை. பாத்திரத்திற்கு தக்க மாணவனைத் தேர்ந்தெடுத்தபின் அவனுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/41&oldid=727335" இலிருந்து மீள்விக்கப்பட்டது