பக்கம்:Mixture.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器8 கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் இதுவரையில் கண்டக்டர்கள், ஸ்டேஜ் டைரெக்டர்கள் கிரீன் ரூம் டைரெக்டர்கள் கடமையைப் பற்றி எழுதினேன். இனி ஒவ் வொரு நாடகத்திற்கும், இன்றியமையாக புராம்டர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். புராம்டர் என்கிற பதத்திற்கு சொல்லிக் கொடுப்பவன் என்று பொருட்படும். அதாவது நாடகத்தில் நாடக பாக்கிரம் ஏதாவது மறந்து போனல் அதை ஒரு பக்கமாயிருந்து சொல்லிக் கொடுப்பவ கும். புஸ்தகங்களின்றி, நாடக பாத்திரங்கள், தங்கள் இச்சைப்படி பேசும் நாடகசபைகளுக்கு புராம்டர் வேண்டியதில்லை. நாடகாசிரியன் எழுதியபடி வசனத்தைப் பேசும் ஆக்டர்களுடைய சபைகளுக்கு ஒரு புராம்டர் அதி அவசியமாம். எப்படிப்பட்ட சிறந்த ஞாபக சக்தியையுடைய ஆக்டாாயிருந்த போதிலும் சில சமயங்களில் தான் ாங்கத்தின் மீது சொல்ல வேண்டிய வசனத்தை மறக்கும் சமயங்கள் நேரிடும், அச்சமயத்தில் ஆக்டரைக் கை கொடுத்துக் கரையேற்றுப வன் இந்த புராம்டரே. ஒவ்வொரு நாடகத்திற்கும் தக்கதோர் மனிதனைப் புராம்டாக ஏற்படுத்த வேண்டியது கண்டக்டருடைய கடமையாகும்; இந்த புராம்டர் நாடகக் கதையைப் பன் முறை முன்னதாகவே படித்து வைத்திருத்தல் கலம், முதன் முறை நாடகம் நடிக்கப்படும் பொழுது, சைட் படுதாவிலிருந்து பக்கத்திலி ருக்கும் ஆக்டர் மறந்து போனதை அவனுக்கு எடுத்துச் சொல்ல புஸ்தகத்திலிருப்பதை எழுத்துக் கூட்ட ஆர்ம்பித்தால், பிரயோ ஜனப்படாது; அப்படிச் செய்வது எப்படி யிருக்குமெனில், எதிரி வாள் யுத்தத்திற்கு வந்த பின் அவனெதிரில் தன் வாளைத் திட்டு வதற்கு ஒப்பாகும்! அன்றியும் இந்த புராம்டர் ஒத்திகைகள் நடக்கும் பொழுதெல்லாம் தானும் கூட இருந்து கவனித்து வுரு வதில் மிகவும் பலனுண்டு. அப்படிச் செய்வதால், இன்னின்ன ஆக்டர் இன்னின்ன இடங்களில் சாதாரணமாகத் தவறுகிருன் என்று கவனிக்க அனுகுணமாகும். இதல்ை நாடகத்தினத்தில் அங் தந்த இடங்களில் சுலபமாய்ச் சொல்லிக்கொடுக்கக் கூடும்; அன்றியும் புராம்டரானவர் நாடகம் எழுதியுள்ள பாஷையில் வல்லவன யிருத்தல் உசிதமாம். சில சமயங்களில் ஆக்டர்கள் தாங்கள் பேச வேண்டிய வாக்கியங்களே, கிரமப்படி அல்லாது மாகத் - தவறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/45&oldid=727339" இலிருந்து மீள்விக்கப்பட்டது