பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாடகமேடை நினைவுகள் முகவே நடிக்கப் பட்டதென்று கான் நினைக்கிறேன். நாடகம் நடிக்கும்பொழுது என் தகப்பனர் சங்கத்தின் எதிரில் உட்கார்க் திருக்கிருர் என நான் அறிந்தும், கடைசிவரையில் நான் அவ ரைப் பார்த்தவனன்று. அவர் எங்கே எப்படி உட்கார்க் கிருந் தார் என்பதையும் கவனித்தவன் அன்று. இதை நான் இங்கு கு றிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு அது மேடை யின் மீதேறி நாடகங்களில் நடிக்க விரும்பும் எனது சிறிய நண் பர்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படும் என்று நான் உறுதி கிறேன். அன்று முதல் இன்றுவாை. நான் கணக்கிட்டபடி சுமார் ஐக் நாற்றுச் சில்லரை நாடங்களில் நடித்திருக்கிறேன்; இவற். றுள் ஒன்றிலாகிலும் ரங்கத்தின் எதிரில் யார் எங்கே இருக் கிரு.ர்கள் என்று கூட கவனிக் கவனன்று. அப்படிக் கவனியாத தற்கு இரண்டு முக்கியகாரணங்களிருக்கின்றன ; முதலாவது. அப்படிக் கவனிப்பேனுயின், அந்த சஷணம், கான் பூண்டிருக்கும் வேஷதாரியாயில்லாமல், வெறும் சம்பந்தம் ஆகி விடுகிறேன் ல் லவா ? ஒருவன் அமலாதித்யமூக சங்கத்திலிருக்கும் பொழுது, அவனது சொந்த தந்தையோ, தாரமோ, நண்பனே, ரங்கத்தின் எதிரில் யார் உட்கார்க் திருக்கிறது என்று கவனிப்பானே? அவ னது எண்ணமெல்லாம் ரங்கத்தின் மீதிருக்கும். அவனது நாடகத் கந்தைய்ோ, சிற்றப்பனே, காதலியாகிய அபலையோ தாயாராகிய கெளரிமணியோ, நண்பனை ஹரிஹாளுே எங்கிருக்கிருர்கள் என்றல்லவோ கவனிக்கவேண்டும் மற்ருெரு காாணமும் முக்கிய மானதே ; மேடையில் நடிக்கும் ஒரு நாடக பாத்திரம், சங்கத் தில் யார் யார் வந்திருக்கிரு.ர்கள் , அவர்கள் தன்னைப்பற்றி என்ன பேசிக் கொள்கிருர்கள், தான் நடிப்பது நன்குயிருக்கிறது என்று. நினைக்கிரு.ர்களா. அல்லது நன்முக இல்லையென்று எண்ணுகிருர் களா, என்று கவனிக்கத் தொடங்கில்ை, உடனே அவனுக்கு, சங்கபிதி அல்லது பயம் உண்டாகும் புதிதாய் ாங்கத்தின் மீது எறும் எனது இள ையுடைய நண்பர்கள் அசேகர். 'சார் கான் போன வுடன், என் சிநேகிதன் (அல்லது தகப்பனுர், தாயார்) ாங்கத்தின் பேரில் எதிரில் உட்கார்த்ததைப் பார்த்து விட்டேன், உடனே எனக்கு பயமாகி விட்டது. கை கால் உதற ஆசம் பித்துவிட்டது. என் பாடத்தை மறந்துவிட்டேன் ' என்று எத்தனையோ முறை எனக்குக் கூறியிருக்கிருர்கள். அவர்களுக் கெல்லாம் நான் கூறும் பதில் என்னவென்ருல், ! உங்களை யார் அவர்களையெல்லம் பார்க்கச்சொன்னது? அப்படிப் பாாாதிருக் தால் இந்தப்பயம் வந்திராதே,” என்பதுதான். இப்படிக் கூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/55&oldid=727466" இலிருந்து மீள்விக்கப்பட்டது