உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாடகமேடை நினைவுகள் தங்குவதற்காகச் சத்திரம் கட்டிவைத்தவர், தர்மம் செய்வதில் தனது கூர்மையான புத்தியைக்கொண்டு மிகவும் சாதுர் யமாய்ச் செய்வார். அதற்கு உதாரணமாக மேற்குறித்த சத் திரத்தையே கூறலாம், இரண்டு செயில் ஸ்டேஷன்களுக்கும் மத்தியில். பிரயாணிகளுக்கு மிகவும் அனுகூலமாயிருக்கும்படி இடம் சம்பாதித்து, கட்டிய அச் சத்கிரம் இன்னும் தினம் எத்தனை நாற்றுக்கணக்கான ஜனங்களுக்கு சவுகரியத்தைத் சுருகிறதென்பது பட்டண வாசிகளாகிய என் நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை இவர் பிரசவ ஆஸ்பத் கிரிகள், அம்மை குத்துகிற இடங்கள், மாடுகள் குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தண்ணீர்த் தொட்டிகள், முதலிய ஜனங்களுக்கு பல சவுகர்யத்தை யுண்டுபண்ணும்படியான தர்மங்களைச் செய் துள்ளார். அக்காலத்தில் சென்னையில் தர்ம விஷயமாக ஏதா வது கைங்கர்யம் எடுத்துக்கொண்டால் இவரது பெயர் அதன் ஜாபிதாவில் முதலில் வராமலிராது என் தகப்பனுருடைய கடி தத்தை இவரிடம் கொடுத்தனுப்ப, உடனே என்னைப் பரிவுடன் வரவழைக்து, தன் பக்கலில் உட்கார வைத்துக்கொண்டு, எங்கள் சபையைப் பற்றி பத்து நிமிஷத்தில், தான் அறியவேண்டிய விஷ யங்களை யெல்லாம், சில கேள்விகளால் அறிந்துகொண்டார். யூனிவர்சிடி பட்டம் பெருவிட்டாலும், இவ்விஷயத்தில் இவர் புத்திசாதுர்யம் மிகவும் மெச்சத்தக்கதே. பிறகு என் வேண்டு கோளுக்கிாங்கி எங்கள் சபையின் பிரசிடெண்ட்டாயிருக்கி ஒக் புக் கொண்டது மன்றி, எனக்கு சபை நடத்த வேண்டி ய விஷ் யங்களில் சில புத்திமதிகளையும் கூறினர். அவைகள் அனைத் தையும் இங்கு நான் கூற வேண்டிய அவசிய மில்லை. என்து சிறிய நண்பர்களுக்கு மிகவும் உபயோகப்படும் என்றுதோன்றும், ஒனறை மாத்திரம் இங்கெடுத்துக் கூறுகிறேன். இவர் எழும் பூரிலுள்ள இவரது மாளிகைக்குப் போகு முன், ஆச்சாரப்ப்ன் விகியில் எங்கள் வீட்டிற்கு நாறு அடிக்குள்ளதாக இருக்கும் ஒரு வீட்டில் வசித் திருந்தார்; எனது தந்தையாரிடம் இவருக்கு அதிக மகிப்புண்டு. அது பற்றி அடிக்கடி எங்கள் விட்டிற்கு வருகிற வழக்கமுண்டு. அப்போது நான் முன்கோப முடைய வன் என்று கவனித்திருக்கக் கூடுமென்று கினேக்கிறேன். அது காரணம் பற்றியோ, அல்லது மொத்தத்தில் இப் புத்திமதியை எனக்கும் கூறவேண்டு மென்ருே 'அப்பன், ஒன்று முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள், கழுதையா யிருந்தாலும் காம் காலைப் பிடிககவேண்டிய சமயம் ஒன்ற வந்தாலும் வரும். ஆகவே, ஒரு வரையும் பகைத்துக் கொள்ளதே !’ என்ருர், எனது பக. தொன்பதாம் ஆண்டிலிருந்தபடிய ல், எனக்கு அப்பொழுது, அப்புத்தி மதியின், எட்பம் தெரியாமற் போயிற்று. பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/61&oldid=727473" இலிருந்து மீள்விக்கப்பட்டது