பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 59. சரியாக பதில் உரைத்தேன் என்கிற உவகையிகுலோ, பிறகு தாலும் சபையை ஆதரிப்பவர்களில் ஒருவராக இருக்க ஒப்புக் கொண்டார், பிறகு சிவான் பஹது பாக்கம் ராஜரத்தினமுதலியார் வீட்டிற்குப்போனுேம். அப்பொழுது அவர் எங்கள் குடும்பத் திற்குச் சம்பந்தியாகவில்லை. அவர் ஆரம்ப முதல் இம்மாதிரி வசன நாடகச் சபைகளினுல் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று கூறி ஆட்சேபிக்க ஆரம்பித்தார். முதலில் சாந்தமாகவே, பெரி யவசாயிற்றே என்று மிகவும் மரியாதையுடன் எனக்குத் தோன் றிய கியாயங்களையெல்லாம் எடுத்துத் கூறிப்பார்த்தேன். அத ல்ை அவர் ஒன்றும் சளேயாம்ற் போகவே, எனக்குக் கோபம் பிறந்து விட்டது பிறகு எட்டிக்குப் போட்டியாய் அவர் கூறு வதற்கெல்லாம் பதில் உரைக்க ஆரம்பித்தேன். என் பக்சத்திலி ருத்த முத்துக்குமாரசாமி செட்டியார் மெல்ல சைகை செய்தும் பல தடவைகளில், என் ஆத்தி ம் அடங்காது பேச ஆரம்பித்து விட்டே ன். கடைசியாக முதலியார் அவர்கள், இம்மாதிரியாக நாடகங்கள் ஆடுவதில் தேசத்திற்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டார். அதற்கு நான் அதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் மகா கவியைக் கேடடுப்பாருங்கள்’ என்று பதில் பகர்த்தேன். அதெல் லாம் சீமைக்கு, நம்முடையதேசத்தில் அம்மாதிரி யார் இருக்கிருர் கள்? என்று கேட்க இப்பொழுதில்லாவிட்டாலும், இனி ஒரு காலம் அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நமது தேசத்திலும் பிறப் பார் என்று பதில்உரைத்தேன். நான் என்ன கூறியும் அவர்மனம் அப்பொழுது மாறவில்லை. ஒரே பிடிவாகமாய் எங்கள் சபையை ஆதரிப்பவர்களுள் ஒருவாக இசையமாட்டேன் என்று மறுத்து விட்டார் பிறகு ரங்களிருவரும் அவசிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பிப்போகும் பொழுது செட்டி யார், என்ன அப்பா சம்பந்தம் பெரியவராகிய அவரிடம் அப்படிப் பேச லாமா ?’ என்று என்னே மிகவும் கடித்து கொண்டார். கான் பேசியதில் என்ன தவறு இருந்தது சொல்லுங்கள், என்று கான் அவரைக் கேட்டபொழுது ஒரு குற்றத்தையும் எடுத்துக் காட்ட அவால் முடியாமற் போன போதிலும், நீ பேசிய மாதிரி தப்பி தம் ' என்று கூறிஞர். இப்பொழுது இதைப்பற்றி நான் சாவ காசமாய் யோசித் துப் பார்க்குமிடத்து செட்டியார் கூறியது வாஸ்தவம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில் என் னிடமிருத்த பல துர்க்குணங்களில் இது ஒன்மும், ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி நான் தொண்ட அபிப் பிராயங்கள் மிகவும் சரியானவையாயிருந்த போதிலும், அவற்றை மற்றவர்களுககு ன்த்ேதுக் கூறும் 'விஷயத்தில் சாத்தமாய் அவைகளைக் கூறி மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/64&oldid=727476" இலிருந்து மீள்விக்கப்பட்டது