7
7 இக்க பிரம்மோற்சவம், எல்லா சிவாலயங்களிலும் ஒரே மாசத்தில் ஆரம்பித்து முடிக்கப்படுவதன்று. இவ் விஷயத்தில் சில பெரிய சிவாலய பிரம்மோற்சவம் கடை பெறும் மாசங்கள் இங்குக் குறிப்போம் : சித்திரை மதுரை, பவானி, தஞ்சாவூர், திருவை யாறு, திருக்காளர், திருக்கடையூர், திருக்கழுக்குன்றம், சீர்காழி, திருமயம், அச்சிறுபாக்கம், அண்டமி, அவிசாசி திருவையாறு, திருக்கச்சூர், திருச்சூர், திருமுல்லே வாயில் வைகாசி : சேலம், திருவிடை மருதூர், கண்டியூர், சங்கர நாராயணர் கோயில், ஊற்றத்துனர், திருப்பாசூர். ஆணி : சிதம்பரம், ஆவடையார் கோயில், திருவா னேக்கா (சம்புகேஸ்வரம்) திருநெல்வேலி, திருப்பூவணம். ஐப்பசி : மாயவரம், கார்த்திகை : திருவண் ணுமலே. மார்கழி : சிதம்பரம் தை : அனகாவூர், கிருவோத்துர், அவளிவணல் அார், திருவாவடுதுறை, திருவிடை மருதுார். மாசி ; காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருஒற்றியூர், விருத்தாசலம், திருமழபாடி, கும்பகோணம், வைதீஸ்வரர் கோயில், கஞ்சனூர். பங்குனி - ஆரூர், காஞ்சி, திருமயிலே, கருவூர் ஆனிலே, திருப்பனந்தாள், பேருர், திருப்பாலைவனம். மேற்குறித்த பிரம்மோற்சவங்களே ஆராயுமிடத் து அவைகள் பெரும்பாலும் மழையில்லாத தை முதல் வைகாசி வரையிலுள்ள மாதங்களில் தான் அநேக சிவால யங்களில் நடைபெறுகின்றன என்றறிகி ருேம். இம் மாதங்களில் தான் சாதாரணமாக புஷ்பங்கள் பழங்கள் முத்லியன அதிகமாய்க் கிடைக்கும் என்பதை கவ்னித்த வும். சாகரர்ணமாக மழை பெய்யும் புரட்டாசி, அற்பிசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அவ்வளவாக நடப்ப தில்லை. (இவைகள் சாதுர் மாசங்களில் அடங்கியவை என்பது கவனிக்கத்தக்கது.) - தேவிக்கு உற்சவம் ஆடி மாதம் கடைபெறுகிற து ஸ்கந்த சஷ்டி யாகிய சுப்பிரமணியர் உற்சவம் அற்பிசி மாசம் நடைபெறுகிறது.