பக்கம்:Pari kathai-with commentary.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ւ- ուն] 105 தன்னினும் உற்ருர் உயர்வுநோக்கி ஒடுவந்தது. அடல் ஏற்றணைவலியையுடைய சிங்காசனம், (65) 157. ம டுக் கடங்கா மதியா னெறழ்ப்பாகன் கட்டுக்கடங்காக் களிறுகடாய்-கட்ட வெளிலனைத்த வாறேய்க்கு மேதக்கோன் வேளை மிளிரணைக்க னேற்றுவித்த வீற. (இ-ள்.)-அளவிற்கு அடங்கா மதியொடு வலியுமுடைய யானைப் பாகன் கட்டுதற்கு அடங்காத களிற்றினை நடத்தி ஊன்றிய கட்டுத் தறியிற் சேர்த்த தன்மையை யொக்கும் மேதகவுடைய கபிலன் வேள்பாரியை விளங்கும் அரசு கட்டிலில் ஏறச்செய்த வெற்றி. எ-று. கபிலற்கு மதியொடு சொல்வலி கொள்க. பாரி களிறுபோலவும் கபிலன் அதனை நடத்தும் பாகன் போலவும் ஆதல் குறிக்கொள்க. கட்டுக்கடங்காக் களிறு என்றதனால் மதத்தான் மயங்கியதாதல் துணிக. பாரி கொடைமடத்தால் மயங்குதல் குறிக்கும். வெளில் யானைகட்டுக்தறி. அணைத்தல்-சேர்த்தல். "அணைத்த கடந்தல்' (முருகாறு) என்புழிப் போல: அணைமுதல் என்பது தறிக்குப் பெய ராதலுணர்க. அனைமுதற் பிணிக்கும்' என்பது பட்டினப்பா?ல. வீறு என்றது முன் வெல்லுந் திறனய்ந்து வேட்கு' என அறைந்த படித்தன் சொல்வழிப் படுத்திய வெற்றியை சொல்வலி பாகனுக்கும் வேண்டும். மிளிர் அணையென்றது. பாரி ஏறுதலான் எய்திய பொலி வுடைமை குறித்தது. (66) 158. வேளிர் குலக்கோழுந்தை வெம்மடங்கல் வீறனைமீ தாளி யெனப்புகல வாங்கிரீஇ-நீளணிகண் முன்பணிந்த வாறே முறையிற் புனைவித்தா னின்பணிந்த வான்புலவ ரேறு. (இ-ள்.)-வேளிர் குலமாகிய வேரி ற்குக்கொழுந்து போன் ற பாரியை வெய்ய சிங்கஞ்சுமந்த விசயாசனத்தின்மேற் கண்டார் இவன் மக்கள் வடிவினுள்ளதோர் ஆளி யென்று சொல்லும்படி அக்கோயி இல் இருத்தி நெடுநாட்டொட்டு வழிவழியாய் வருகின்ற அணிகளை த் தனக்கு ஈதற்கு முன்னே அணிந்திருந்தபடியே புலவரில் ஏறுபோல் பவனகிய கபி லன் அரசர்க்குரிய முறைமைப்படி அணிவித்தான்.எ-று. உலகத்தை இன்பத்தால் அலங்கரிக்கும் சிறந்த புலம்ைபருள்ளே தலைவன் என்க. உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' o 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/202&oldid=727836" இலிருந்து மீள்விக்கப்பட்டது