பக்கம்:Pari kathai-with commentary.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுாை) 21 யென்று பல வேத்தி - + - a- * = i .i. * - + ... -- மாரியு முண்டீண் லெகுபு ப் பதுவே ' ( |றம்-107) எனப் பாரியைப் பற்றிய கபிலர் பாட்டை இளம்பூரணரும், சச்சிர்ைக்கினியரும் எடுத்துக் காட்டுதல் கினையலாம். 2. வளம்பாடுதிறம். இது வேள் பாரியின் நாடும், மலையுஞ், சுனேயும் வளஞ் செய்தலைப் பண்டையோர் செய்யுள்களிற் கண்ட வாற்ருெடு பொருந்தச் சிறப்பித்துப் பாடியதாகும். நாட்டின் வளம் அதனே ஆளும் அரசனுற் சிறக்க வேண்டுதலின், ஈண்டுப் பறம்பு நாடாளும் வேள்பாரியின் மேம்பாடும், அவன் இல்லறத்தேவி கற்புத் தலைமையும், அவன் குலமகளிர் கல்விச் சிறப்பும், ஒழுக்கமும், பிறவும் உடன் கூறப்பட்டன. இது "மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்" (புறம்-186) என்ற சான்ருேர் கருத்தினத் தழிஇ யுரைத்ததாம். பாரி நாடு, பறம்பு நாடு, பறநாடு எனவும், அவன் மலை, பறம்பு மலை எனவும், அம்மலைச்சுனே, பனிச்சுனே எனவும் பழைய நூல்களில் வழங்கப்படும். இவற்றைப் பாடிய புல வர், கபிலர், ஒளவையார், மிளேக்கந்தனர், நக்கீரனர் முதலி யோர். இப்பாரி நாடு, பாண்டி காட்ட தென்பது, 'புரிசைப் புறத்தினிற் சேரனுஞ் சோழனும் பேர்புரிய இரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனப் பரிசிற்கு நல்ல கவிபாடி ல்ைவரும் பாக்யமேன்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டிய மண்டலமே' எனவரும் பாண்டிமண்டல சதகச் செய்யுளான விந்தது. கபிலர், அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் " (புறம்-109.) எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/27&oldid=727910" இலிருந்து மீள்விக்கப்பட்டது